யூஜிசியின் 2021ம் ஆண்டு விதிமுறைகளின்படி, கல்லூரிகளில் பேராசிரியர்களாக பணிபுரிய நெட், செட், ஸ்லெட் தேர்வுகள் அவசியம் என்றாலும், பி.ஹெச்டி முடித்திருந்ததும் தகுதியாக கருதப்பட்டது.
இந்நிலையில், யுஜிசி விதிகளில் மாற்றம் செய்துள்ளது.
அதன்படி, கல்லூரிகளில் உதவிப் பேராசரியராகப் பணியாற்ற இனி பி.ஹெச்டியை ஒரு தகுதியாக ஏற்றுக்கொள்ள முடியாது என்று யூஜிசி தற்போது அதிகாரப்பூர்வ தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும் கல்லூரிகளில் உதவிப்பேராசிரியராகப் பணியாற்ற நெட், செட், ஸ்லெட் தேர்வுகளில் தகுதிபெற்று இருப்பது மட்டுமே கட்டாயம் என்று சொல்லப்பட்டுள்ளது.
2021ம் ஆண்டு பல்கலைக்கழக மானியக்குழு விதிகளின்படி கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணியாற்ற பி.ஹெச்டி முடித்திருந்தால் தகுதியாக ஏற்றுக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த திடீர் அறிவிப்பு முனைவர் பட்டம் முடித்தவர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இந்நிலையில் விதிகளில் மாற்றம் செய்து நெட், செட், ஸ்லெட், உள்ளிட்ட தகுதிகளின் அடிப்படையில் கல்லூரிகளில் உதவி பேராசிரியர்களை நியமித்துக் கொள்ளலாம் என பல்கலைக்கழக மானிய குழு தெரிவித்துள்ளது. 2021ம் ஆண்டு பி.ஹெச்டி படிப்பு முடித்திருந்தால் உதவி பேராசிரியராக பணியாற்றலாம் என அறிவிக்கப்பட்ட விதியை மாற்றி தற்போது பி.ஹெச்டி படிப்பை கூடுதல் தகுதியாக சேர்த்துக் கொள்ளலாம் என பல்கலைக்கழக மாநில குழு அறிவித்துள்ளது.
ஆசிரியர் தேர்வு வாரியம் அனைவருக்கும் ஒரே மாதிரியாக தேர்வு நடத்த வேண்டும். ஏனென்றால் பாடத்திட்டங்கள் ஒவ்வொரு காலக்கட்டத்திற்கும் ஏற்ப மாற்றம் அடைகிறது. அதற்கு ஏற்றார்போல அனைத்துத் தேர்வர்களுக்கும் சரியான முறையில் சமவாய்ப்பு வழங்க வேண்டும் என்று நீண்டகாலமாக பணிக்காக காத்திருக்கும் தேர்வர்கள் கூறிவருகிறார்கள்.
முதுகலைப் படிப்பு முடித்தவுடன் உதவிப்பேராசிரியர்களுக்கான தேர்வை வைக்கலாம் போன்ற கோரிக்கைகள் சில ஆண்டுகளுக்கு முன் எழுந்தது. ஆனால் தற்போது பல்கலைக்கழக மானியக் குழு எடுத்திருக்கும் இத்தகைய நடவடிக்கை பெரிய அளவில் உதவிப் பேராசிரியர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தும்.