Thursday, August 14, 2025
HomeBlogபள்ளி, கல்லூரி, திரையரங்குகள் திறக்க அனுமதி

பள்ளி, கல்லூரி, திரையரங்குகள் திறக்க அனுமதி

பள்ளி, கல்லூரி,
திரையரங்குகள் திறக்க
அனுமதி

தமிழகத்தில் கட்டுப்பாடுகளுடன் கூடிய
ஊரடங்கு மேலும் 2 வாரங்கள்
நீட்டிக்கப்படுவதாக தமிழக
அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்று பரவலைக்
கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு 23ஆம்
தேதியுடன் நிறைவடையவிருந்த நிலையில்,
முக்கிய அமைச்சர்கள் மற்றும்
அதிகாரிகளுடன் முதல்வர்
இன்று ஆலோசனை நடத்தினார்.

ஆலோசனைக்
கூட்டத்தையடுத்து, தமிழகத்தில் பல முக்கிய தளர்வுகள்
அறிவிக்கப்பட்டிருப்பதுடன், ஊரடங்கு
மேலும் 2 வாரத்துக்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது
குறித்து தமிழக அரசு
வெளிட்டிருக்கும்
அறிக்கையில்:

தமிழகத்தில் நடைமுறையிலிருக்கும் ஊரடங்கு
23
ஆம் தேதி காலை
6
மணியுடன் முடிவடையும் நிலையில்,
மாநிலத்தில் மாவட்ட வாரியாக
நோய்த் தொற்றின் பரவலின்
தன்மை, அண்டை மாநிலங்களில் நோய்த் தொற்றின் தாக்கம்,
ஊரடங்கு கட்டுப்பாடுகள், தடுப்பூசி
குறித்த விழிப்புணர்வு மற்றும்
கரோனா கட்டுப்பாடு நடவடிக்கைகளின் செயலாக்கம் குறித்து இன்று
தலைமைச் செயலகத்தில் முதல்வர்
தலைமையில் ஆலோசனைக் கூட்டம்
நடைபெற்றது.

ஆலோசனைக்
கூட்டத்தின் அடிப்படையில், கரோனா
பரவல் கட்டுப்பாடுகள் செப்டம்பர் 6ஆம் தேதி காலை
6
மணி வரை மேலும்
இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்படுகிறது.

முன்பே
அறிவித்தவாறு இன்று
நடைபெற்ற கூட்டத்தில் பின்வரும்
முடிவுகள் எடுக்கப்பட்டன.

  • செப்டம்பர் 1 முதல் பள்ளிகளில் 9,10,11 மற்றும்
    12
    ஆம் வகுப்புகள் சுழற்சி
    முறையில், நிலையான வழிகாட்டு
    நெறிமுறைகளைப் பின்பற்றி,
    செயல்படும்.
  • பள்ளிகளில் மதிய உணவுத் திட்டமும்
    உரிய வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும்.
  • உயர்
    வகுப்புகள் செயல்படுவதன் அடிப்படையில், மழலையர் வகுப்புகள், 1 முதல்
    8
    வரை உள்ள வகுப்புகளை செப்டம்பர் 15க்குப் பிறகு
    திறப்பது குறித்து ஆலோசனை
    செய்து அறிவிக்கப்படும்.
  • அனைத்துக்
    கல்லூரிகளும் செப்.
    1
    முதல் சுழற்சி முறையில்
    வகுப்புகள் நடத்த அனுமதிக்கப்படும். கல்லூரிகளில் ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லத பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்.
  • அனைத்து
    பட்டயப் படிப்பு வகுப்புகள் சுழற்சி முறையில் நடத்த
    அனுமதிக்கப்படும். ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லத பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்.
  • அங்கன்வாடி மையங்கள், செப்டம்பர் 1 முதல்
    மதிய உணவு வழங்குவதற்கு செயல்பட அனுமதிக்கப்படும்.

தளர்வுகள் என்னென்ன அறிவிக்கப்பட்டுள்ளன? முழுமையான விவரம்

  • ஆந்திர,
    கர்நாடக மாநிலங்களுக்கு பொது
    பேருந்து போக்குவரத்து இயக்க
    அனுமதிக்கப்படும்.
  • மழலையர்
    காப்பகங்கள் செயல்பட அனுமதிக்கப்படும்.
  • நீச்சல்
    குளங்கள் விளையாட்டு பயிற்சிகளுக்கு மட்டும் 50% பயிற்சியாளர்களுடன் செயல்பட
    அனுமதிக்கப்படும்.
  • தமிழ்நாடு
    திறன் மேம்பாட்டுக் கழகம்
    மற்றும் மகளிர் மேம்பாட்டுக் கழகம் மூலம் நடத்தப்படும் வேலை வாய்ப்பு பயிற்சி
    வகுப்புகள் செயல்பட அனுமதிக்கப்படும்.
  • தங்கும்
    விடுதிகள், கேளிக்கை விடுதிகளில் உள்ள மதுக்கூடங்கள் செயல்பட
    அனுமதி.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments