பிப்.1 முதல்
சென்னையில் கடற்கரைகளுக்கு செல்ல
அனுமதி
தமிழகத்தில் கடந்த ஜனவரி 1 ஆம்
தேதி முதல் கொரோனா
பரவல் அதிகரித்தது. ஓமிக்ரான்
எனும் புதிய வேரியண்ட்டால் கொரோனா 3ஆவது அலை
தீவிரமடைந்ததாக மருத்துவ
நிபுணர்கள் அறிவித்தனர்.
இதையடுத்து தமிழகத்தில் தினசரி கொரோனா
கேஸ்களின் எண்ணிக்கை 4 இலக்கத்திலிருந்து 5 இலக்கமாக உயர்ந்தது.
இதையடுத்து கடந்த 6 ஆம்
தேதி முதல் தமிழகத்தில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டன.இரவு நேர
ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு
ஊரடங்கு, சினிமா தியேட்டர்,
கடற்கரைகள், துணிக் கடைகள்,
நகைக் கடைகளில் 50 சதவீதம்
வாடிக்கையாளர்களை அனுமதிக்க
தமிழக அரசு அறிவுறுத்தியது. அது போல் கடற்கரைகளுக்கு செல்ல ஜனவரி 31 ஆம்
தேதி வரை தடை
விதிக்கப்பட்டிருந்தது.
பொதுவாக
காணும் பொங்கலுக்கு மக்கள்
கடற்கரைகளில் பொழுதை
கழிக்க செல்வதுண்டு, ஆனால்
அன்றைய தினம் முழு
ஊரடங்கு என்பதால் செல்ல
முடியவில்லை. இதனால் கடற்கரைகள் மக்கள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. மக்கள் நடைப்பயிற்சிக்கு மட்டும் அனுமதிக்கப்பட்டு வந்தனர்.
இந்த
நிலையில் தமிழகத்தில் கொரோனா
தொற்று குறைந்துள்ளதால் தமிழக
அரசு கட்டுப்பாடுகளை தளர்த்தியது. அதன்படி இரவு நேர
ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு
ஊரடங்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. பிப்ரவரி 1ஆம்
தேதி முதல் அனைத்து
வகுப்புகளுக்கு பள்ளிகள்
திறக்கப்படுகிறது. கல்லூரிகளும் திறக்கப்படுகின்றன.
இந்த
நிலையில் சென்னையில் பிப்ரவரி
1ஆம் தேதி முதல்
மெரினா, பெசன்ட் நகர்
கடற்கரைகளுக்கு செல்ல
மக்களுக்கு அனுமதி அளிக்கப்படுவதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. கடற்கரைகளில் கூட்டமாக
கூடக் கூடாது, மாஸ்க்
அணிந்து விதிகளை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

