HomeBlogமாற்றுத்திறனாளிகள் ஸ்மார்ட் போன் பெற விண்ணப்பிக்கலாம் - திருவாரூர்

மாற்றுத்திறனாளிகள் ஸ்மார்ட் போன் பெற விண்ணப்பிக்கலாம் – திருவாரூர்

மாற்றுத்திறனாளிகள் ஸ்மார்ட்
போன் பெற விண்ணப்பிக்கலாம்
திருவாரூர்

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள
மாற்றுத்திறனாளிகள் ஸ்மார்ட்
போன்கள் பெற விண்ணபிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த 18 வயதிற்கு
மேற்பட்ட காது கேளாத,
வாய் பேசாத மற்றும்
பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு தக்க
செயலியுடன் கூடிய ஸ்மார்ட்
போன் வழங்கப்பட்டு வருகிறது.
மேற்காணும் செல்போன்களை கல்லூரி
பயில்பவர்கள், சுயதொழில்
புரிபவர்கள் மற்றும் பணிபுரிபவர்கள் மட்டுமே பெற தகுதியானவர்கள்.

எனவே,
திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த
காதுகேளாத, வாய் பேசாத
மற்றும் கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் தேசிய
அடையாள அட்டையுடன் கூடிய
மருத்துவ சான்றிதழ் நகல்,
ஆதார் அட்டை நகல்,
பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் ஒன்று, கல்வி பயிலும்,
பணிபுரியும், சுய தொழில்
புரிவதற்கான சான்று ஆகிய
ஆவணங்களுடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம்,
அறை எண்:6, கலெக்டர்
அலுவலகம், திருவாரூர் என்ற
முகவரியில் அடுத்த மாதம்
15
ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular