ராமநாதபுரம் மாவட்டத்தில் அனைத்து வனச்சரக அலுவலகத்திலும் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான மரக்கன்றுகளை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம், என மாவட்ட வன அலுவலர் ஹேமலதா தெரிவித்தார்.
மாவட்டத்தில் நடப்பாண்டில் பசுமை தமிழகம் இயக்கம் மற்றும் தமிழக பல்லுயிர் பரவல் மற்றும் பசுமையாக்குதல், கால நிலை மாற்றம் திட்டத்தில் விவசாயிகள், தொழில் நிறுவனங்கள், பள்ளி, கல்லுாரிகள்மற்றும் பொதுமக்களுக்கு விலையில்லா மரக்கன்றுகள் வழங்கப்பட உள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தின் தட்பவெப்ப நிலைக்கும் மண்ணின் தரத்திற்கும் ஏற்ப மகோகனி, பலா, மா, வேம்பு, வேங்கை, ஈட்டி, தேக்கு, கொடுக்காபுளி, கொய்யா, நெல்லி, மகிழம், சவுக்கு மற்றும் பல இன மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.மரக்கன்றுகள் தேவைப்படும் பொதுமக்கள், விவசாயிகள், தொழில் நிறுவனங்கள், பள்ளி, கல்லுாரி நிறுவனங்கள் மாவட்டத்தில் உள்ள வனச்சரக அலுவலகங்களில் நேரிலோ அல்லது தொலைபேசியிலோ தொடர்பு கொண்டு பயன் அடையலாம்.ராமநாதபுரம் வனச்சரகம் – 63839 40433, தங்கச்சிமடம் 90259 52577, சாயல்குடி வனச்சரகம் 84387 71496, பரமக்குடி வனச்சரகம் 80726 68033, ஆர். எஸ். மங்கலம் வனச்சரகம் 82481 49270, ஆகிய அலைபேசிகளில் பொதுமக்கள்தொடர்பு கொள்ளலாம், என்றார்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


