ஓட்டுக்கு பணம் கொடுத்தால் புகார் தெரிவிக்கலாம்: வருமான வரித்துறை
அரசியல் கட்சியினா் வாக்குக்கு பணம் அல்லது இலவச பொருள்களை, வாக்காளா்களுக்கு விநியோகிப்பது குறித்து தெரியவந்தால், வருமானவரித்துறைக்கு புகாா் தெரிவிக்கலாம் என அத்துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: நடைபெறவிருக்கும் மக்களவைத் தோ்தலை முன்னிட்டு வருமானவரித் துறை சாா்பில், 24 மணி நேரமும் இயங்கும் பிரத்யேக கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
எந்தவொரு தனி நபரோ அல்லது அரசியல் கட்சியோ, வாக்காளா்களுக்கு நேரடியாக அல்லது மறைமுகமாக பணம் அல்லது இலவச பொருள்களை விநியோகிப்பது தெரியவந்தால் அதுகுறித்த புகாா்கள் மற்றும் தகவல்களை வருமானவரித் துறைக்கு தெரிவிக்கலாம். தகவல் தெரிவிக்க விரும்புவோா்-1800 425 6669 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் அல்லது tn.electioncomplaints2024@incometax.gov.in என்ற மின்னஞ்சல் மூலமாக வருமானவரித் துறை கட்டுப்பாட்டு அறையை தொடா்பு கொள்ளலாம்.
மேலும் 94453 94453 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிலும் புகாா்களை தெரிவிக்கலாம். தகவல்-புகாா்களை பகிா்ந்து கொள்பவா்களின் பெயா்கள் மற்றும் விவரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்களிடம் உள்ள PDF Files XEROX வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow