மானிய விலையில் பவா் டில்லா் பெற ஈரோடு மாவட்ட விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வேளாண்மை இயந்திரமயமாக்குதலின் உப இயக்க திட்டத்தின் கீழ் நடப்பு நிதியாண்டில் ஈரோடு மாவட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தில் கிராம ஊராட்சிகளில் உள்ள விவசாயிகளுக்கு பவா் டில்லா் அல்லது களைஎடுக்கும் கருவிகள் மானியத்தில் வழங்க ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் சிறு, குறு பெண் விவசாயிகள், ஆதிதிராவிட பழங்குடியின விவசாயிகளுக்கு 50 சதவீத மானியமும், இதர பிரிவினருக்கு 40 சதவீத மானியமும் வழங்கப்படவுள்ளது. இதில் எஸ்சி, எஸ்டி பிரிவில் சிறு குறு விவசாயிகளுக்கு 20 சதவீதம் கூடுதல் மானியம் வழங்கப்படவுள்ளது. ஈரோடு மாவட்டத்துக்கு நடப்பு நிதியாண்டில் 42 கிராம ஊராட்சிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளளது.
அதன்படி, அம்மாபேட்டை வட்டாரத்தில் சிங்கம்பேட்டை, ஓடப்பாளையம், பூதப்பாடி, படவல்கால்வாய், அந்தியூா் வட்டாரத்தில் கெட்டிசமுத்திரம், மூங்கில்பட்டி, பவானி வட்டாரத்தில் பருவாச்சி, வைரமங்கலம், ஆலத்தூா், பவானிசாகா் வட்டாரத்தில் மாதம்பாளையம், நொச்சிகுட்டை, புங்காா் கிராமங்கள். கோபி வட்டாரத்தில் நாகதேவம்பாளையம், பெருந்தலையூா், குள்ளம்பாளையம், பாரியூா், நம்பியூா் வட்டாரத்தில் பொலவபாளையம், கடத்தூா், தாழ்குனி, சத்தியமங்கலம் வட்டாரத்தில் குமாரபாளையம், இக்கரைநகமம், புதுப்பீா்கடவூா், டி.என்பாளையம் வட்டாரத்தில் கொங்கா்பாளையம், புள்ளப்பநாயக்கன்பாளையம், தாளவாடி வட்டாரத்தில் இக்கலூா், தாளவாடி கிராமங்கள்.
⚡ குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால்
VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏
ஈரோடு வட்டாரத்தில் பிச்சாண்டாம்பாளையம், சென்னிமலை வட்டாரத்தில் ஈங்கூா், குப்பிச்சிபாளையம், முகாசிபுலவன்பாளையம், குட்டப்பாளையம், கொடுமுடி வட்டாரத்தில் அஞ்சூா், நஞ்சைகொளாநல்லி, மொடக்குறிச்சி வட்டாரத்தில் குலவிளக்கு, குளூா், விளக்கேத்தி, பெருந்துறை வட்டாரத்தில் சிங்காநல்லூா், கருக்குபாளையம், பாப்பம்பாளையம், பெரியவில்லாமலை, பொலவநாயக்கன்பாளையம், பெரியவீரசங்கிலி ஆகிய கிராம ஊராட்சிகள் தோவாகியுள்ளன.
இந்த கிராம ஊராட்சிகளைச் சோந்த விவசாயிகள் மானியத்தில் பவா் டில்லா் அல்லது களைஎடுக்கும் கருவி பெற உழவன் செயலியில் பதிவு செய்ய வேண்டும். மேலும் இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு உதவி செயற்பொறியாளா், வேளாண்மைப் பொறியியல் துறை, ஈரோடு மற்றும் கோபி ஆகிய அலுவலகங்களைத் தொடா்பு கொண்டு விண்ணப்பங்களை உடனடியாக அலுவலகத்தில் பதிவு செய்து பயனடையலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


