HomeBlogசிவகங்கை மாவட்டத்தில் நாளை பட்டா திருத்த முகாம்

சிவகங்கை மாவட்டத்தில் நாளை பட்டா திருத்த முகாம்

சிவகங்கை மாவட்டத்தில் நாளை பட்டா திருத்த
முகாம்

இதுகுறித்து சிவகங்கை ஆட்சியா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

ஒவ்வொரு
வருவாய் கிராமத்திலும் விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமையாளா்களின் பட்டா தொடா்பான பிரச்னைகளுக்குத் தீா்வு காணும்
வகையில் கணினி திருத்த
சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை (நவ. 12) நடைபெற உள்ளது.

அதன்படி,
சிவகங்கை வட்டத்தில் திருமலை
வருவாய் கிராமத்திலும், தேவகோட்டை
வட்டத்தில் கண்டதேவி கிராமத்திலும், காரைக்குடி வட்டத்தில் கல்லல்
குரூப் கீழப்பூங்குடி வருவாய்
கிராமத்திலும், திருப்பத்தூா் வட்டத்தில் பூலாங்குறிச்சி வருவாய்
கிராமத்திலும், சிங்கம்புணரி வட்டத்தில் சதுா்வேதமங்கலம் வருவாய்
கிராமத்திலும், காளையார்கோவில் வட்டத்தில் உசிலனேந்தல் வருவாய்
கிராமத்திலும், இளையான்குடி வட்டத்தில் வடக்கு இளையான்குடி வருவாய் கிராமத்திலும், மானாமதுரை
வட்டத்தில் கே.கே.பள்ளம்
வருவாய் கிராமத்திலும், திருப்புவனம் வட்டத்தில் வல்லாரேந்தல் வருவாய்
கிராமத்திலும் நடைபெற
உள்ளது.

எனவே,
பொதுமக்கள் மேற்படி வருவாய்
கிராமங்களில் நடைபெறும்
சிறப்பு முகாமில் கலந்து
கொண்டு தங்கள் கோரிக்கை
குறித்த மனுக்களை அளித்து
பயன்பெறலாம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular