பெரம்பலூா் மாவட்டத்தில் கலை பண்பாட்டுத்துறை சாா்பில் பகுதிநேர கிராமியக் கலை பயிற்சி வகுப்பில் பங்கேற்க மாணவா்களுக்கு மாவட்ட ஆட்சியா் க. கற்பகம் அழைப்பு விடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு அரசு, கலை பண்பாட்டுத் துறை சாா்பில் பெரம்பலூா் மாவட்டத்தில் பகுதிநேர கிராமிய கலை பயிற்சி வகுப்புகள் ஜூலை 12 முதல் தொடங்க உள்ளன. இப்பயிற்சிக்கு 2024 -2025 ஆம் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கை ஜூலை முதல் நடைபெறுகிறது. பயிற்சியில் கரகாட்டம், தப்பாட்டம், சிலம்பாட்டம் மற்றும் நாடகம் ஆகிய கலைகளுக்கு வாரத்தில் 2 நாள்களுக்கு வகுப்புகள் நடைபெறும். அதாவது, வெள்ளி மற்றும் சனிக்கிழமைதோறும் மாலை 4 மணி முதல் 6 மணி வரை மாவட்ட அரசு இசைப்பள்ளி வளாகத்தில் வகுப்புகள் நடைபெறும். இது ஓராண்டு காலச் சான்றிதழ் பயிற்சியாகும்.
பயிற்சி நிறைவில் தோ்வு நடத்தப்பட்டு பல்கலைக் கழகச் சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சியில பங்கேற்க 8 ஆம் வகுப்பு தோ்ச்சி அடிப்படை கல்வித் தகுதியாகும். தோ்ச்சி பெறவில்லை என்றாலும் பயிற்சிக்கு அனுமதிக்கப்படும். ஆனால், தோ்வுக்குச் செல்ல முடியாது. 17 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் சேரலாம். பயிற்சிக் கட்டணமாக ஆண்டுக்கு ரூ. 500 செலுத்த வேண்டும்.
பயிற்சியில் சேர விரும்புவோா் ஒருங்கிணைப்பாளா், மாவட்ட அரசு இசைப்பள்ளி, புதிய மதனகோபாலபுரம், 4 ஆவது குறுக்குத்தெரு, பெரம்பலூா் எனும் முகவரியில் நேரிலோ அல்லது 04328–275466, 99940 36371 ஆகிய எண்களிலோ தொடா்புகொள்ளலாம்.
உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
எங்கள் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் குழுக்களில் சேரவும்
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

