TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
பனை மர
இலை தட்டு தயாரிப்பு
பனை
மர இலை தட்டு
தொழில் சுற்றுச் சூழலுக்கு
எந்த ஒரு தீங்கையும் விளைவிக்காதவை.
அதே
போல் ஆடு மாடுகளுக்கு நல்ல தீவனமாகவும், மண்ணில்
எளிதில் மக்கக்கூடியதாகவும், மண்வளத்தை
பாதுகாக்கிறது என்பதால்
சந்தையில் தற்போது அதிகம்
வரவேற்கப்படுகிறது.
கட்டிடமைப்பு:
இந்த
தொழில் செய்வதற்கு அதிக
முதலீடு மற்றும் இடவசதிகள்
தேவையில்லை. குறைந்த முதலீட்டில், வீட்டில் ஒரு சிறிய
அறை இருந்தாலே போதுமானது.
மூலப்பொருட்கள்:
இந்த
தொழில் மந்தார இலை,
பனை மர இலை,
பாக்கு மர இலை
ஆகிய இலைகளை கண்டிப்பாக சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும்.
மேலும்
தட்டு தயார் செய்வதற்கு, கை ஊசி, நூல்
ஆகிய பொருட்கள் தேவைப்படும்.
தயாரிக்கும் முறை:
பனை
மர இலைத்தட்டு தயார்
செய்வதற்கு அதிகளவு மந்தார
இலைகளை பயன்படுத்தி கொள்ளலாம்.
மந்தார
இலை ஒரு மூட்டை
ரூ. 100 விற்கப்படுகிறது. ஒரு
மூட்டை மந்தார இலைகளை
கொண்டு 200 கிலோ இலை
தட்டுகளை தயார் செய்திட
முடியும்.
முதலில்
பச்சை மந்தார இலைகளை
ஒரு கயிற்றில் கோர்த்து,
வெயிலில் ஒருவாரம் வரை
காயவைக்க வேண்டும். பின்பு
நன்றாக காய்ந்த இலைகளை
தண்ணீரில் ஊறவைக்க வேண்டும்.
பிறகு
இலைகளை சுத்தம் செய்து,
இலைகளில் மடிப்புகள் இல்லாமல்,
சமம் செய்து அதன்
மேல் துணியை சுற்றி,
அதன் மேல் அகலமான
கல் வைத்து இலையை
சமன்படுத்த வேண்டும்.
பின்பு
தைக்க பயன்படுத்தும் குச்சிகளை
மூன்றாக பிளந்து, தயார்படுத்தி வைத்துக்கொள்ள வேண்டும்.
பிறகு
குறிப்பிட்ட இலைகளை திரும்பவும் ஒரு முறை அகலமான
கல் வைத்து இலையை
சமன்படுத்த வேண்டும்.
இவ்வாறு
10 முதல் 13 இலைகளை சேர்த்து
ஒரு பனை மர
இலை தட்டு உருவாக்கலாம்.
100 இலை
தட்டு கொண்ட ஒரு
கட்டு மந்தார இலை
தட்டு ரூபாய் 150 முதல்
200 ரூபாய் வரை விற்கப்படுகிறது.
கோயில்,
ஹோட்டல் என்று அனைத்து
இடங்களிலும் விற்பனை செய்யலாம்.
சுய தொழில் துவங்க வாழ்த்துக்கள். பதிவை அனைவருக்கும் ஷேர் செய்தால் யாரோ ஒருவருக்கு உதவும் என்பதை நம்புகிறோம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram


