பிப்ரவரி 28ஆம்
தேதி
பள்ளி மாணவர்களுக்கான ஓவியப்
போட்டி
சென்னை
அரசு அருங்காட்சியகத்தில் 2021 பிப்ரவரி
28ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு, பள்ளி
மாணவர்களுக்கான ஓவியப்
போட்டி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
9ஆம்
வகுப்பு முதல் 12ஆம்
வகுப்பு வரை பயிலும்
மாணவர்கள் இதில் கலந்து
கொள்ளலாம். பங்கேற்கும் மாணவர்கள்
அரசால் அறிவிக்கப்பட்ட கரோனா
பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றி
முகக்கவசம் அணிந்து வரவேண்டும். ஓவியம் வரைவதற்கான சார்ட்
காகிதம் அருங்காட்சியகத்தால் வழங்கப்படும்.
வரைவதற்குரிய பொருட்கள் மற்றும் உபகரணங்களை அவர்களே கொண்டுவர வேண்டும்.
மாணவர்கள் தாங்கள் பயிலும்
பள்ளியின் அடையாள அட்டை
மற்றும் அதன் நகல்
ஒன்றினையும் கொண்டு வரவேண்டும்.
9 மற்றும்
10ஆம் வகுப்பு மாணவர்,
மாணவிகள்– உலக நினைவுச்
சின்னங்கள் / அறிவியலும் மனிதனும்
/ தமிழ்ப் பாரம்பரியம்/ தேசிய
நினைவுச் சின்னங்கள் என்ற
தலைப்பில் வரைய வேண்டும்
11 மற்றும்
12ஆம் வகுப்பு மாணவர்,
மாணவிகள் – எனது பார்வையில் எதிர்கால இந்தியா / கடல்
உலகம் / கிராமக் காட்சிகள்
/ இந்தியப் பாரம்பரியம் என்ற
தலைப்புகளில் மாணவர்கள்
தங்களது ஓவியத் திறமையை
வெளிப்படுத்தலாம்.