
பகுபத உறுப்பிலக்கணம் முக்கிய வினா விடைகள் – TNPSC, அரசு தேர்வுகளுக்கு உதவும்!
TNPSC மற்றும் அரசு தேர்வுகளுக்கு உங்களுக்கு உதவும் பகுபத உறுப்பிலக்கணம் பற்றிய முக்கிய வினா-விடைகள் இங்கே! இந்த க்விஸ் மூலம், நீங்கள் பகுபத உறுப்பிலக்கணம் பற்றி உங்கள் அறிவை மேம்படுத்தலாம்.
இந்த வினா-விடைகள் TNPSC தேர்வுகளுக்காக தனியாக தேர்வு செய்யப்பட்டுள்ளன, மேலும் பகுபத உறுப்பிலக்கணம் என்ற தலைப்பில் உள்ள அனைத்து முக்கியமான வினாக்களும் இதில் உள்ளன.
விடைகளில் ஏதேனும் தவறுகள் இருந்தால் கீழ கமெண்டில் தெரிவிக்கவும்
1) பின்வரும் கூற்றினை ஆராய்க
1. அந்த இந்த என்னும் சுட்டுத் திரிபுகளை அடுத்து வல்லினம் மிகும்
2. எந்த என்னும் வினாத் திரியை அடுத்து வல்லினம் மிகாது
அ) 1 மட்டும் சரி ஆ) 2 மட்டும் சரி
இ) இரண்டும் சரி ஈ) இரண்டும் தவறு
விடை: அ) 1 மட்டும் சரி
2) பின்வருவனவற்றில் தவறான கூற்றைத் தேர்ந்தெடு
அ) இகரத்தில் முடியும் வினையெச்சங்களை அடுத்து வல்லினம் மிகும்
ஆ) உவமைத் தொகையில் வல்லினம் மிகாது
இ) நான்தாம் வேற்றுரம உருபாகிய ‘கு’ வெளிப்படையாக வருமிடத்தில்
வல்லினம் மிகும்
ஈ) இரண்டாம் வேற்றுமை உருபாகிய ‘ஐ’ வெளிப்படையாக வருமிடத்தில் வல்லினம் மிகும்
விடை: ஆ) உவமைத் தொகையில் வல்லினம் மிகாது
3) பின்வரும் கூற்றினை ஆராய்க
1. ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தில் வல்லினம் மிகும்.
2. உருவகத்தில் வல்லினம் மிகும்.
3. எட்டு, பத்து ஆகிய இரண்டும் எண்ணுப் பெயர்களில் மட்டும் வல்லினம்
மிகும்.
4. திசைப் பெயர்களை அடுத்து வல்லினம் மிகாது
அ) 1 மட்டும் தவறு ஆ) 2 மட்டும் தவறு
இ) 3 மட்டும் தவறு ஈ) 4 மட்டும் தவறு
விடை: ஈ) 4 மட்டும் தவறு
4) தவறானதைத் தேர்ந்தெடு:
அ) எழுவாய்ச் சொற்கள் அடுத்து வல்லினம் மிகாது.
ஆ) பெரெச்சம், எதிர்மறைப் பெயரெச்சம் ஆகியவற்றை அடுத்து வல்லினம் மிகும்
இ) என, ஆக போன்ற சொல்லுருபுகளின் பின் வல்லினம் மிகும். ஈ) இரண்டாம் வேற்றுமை உருபு மறைந்து வரும் இடங்களில் வல்லினம் மிகாது.
விடை: ஆ) பெரெச்சம், எதிர்மறைப் பெயரெச்சம் ஆகியவற்றை அடுத்து வல்லினம் மிகும.
5) விகாரப் புணர்ச்சியின் வகைகள் _
அ) 2 ஆ) 3 இ) 4 ஈ) 5
விடை: ஆ) 3
6) கீழ்கண்ட கூற்றினை ஆராய்க
1. அதற்கு, இதற்கு, எதற்கு என்னும் சொற்களின் பின் வல்லினம் மிகாது.
2. இனி, தனி ஆகிய சொற்களின் பின் வல்லினம் மிகும்
அ) 1 மட்டும் சரி ஆ) 2 மட்டும் சரி
இ) இரண்டும் சரி ஈ) இரண்டும் தவறு
விடை: ஆ) 2 மட்டும் சரி
7) பின்வருவனவற்றுள் தவறானதைத் தேர்ந்தெடு:
அ) ஓரெழுத்து ஒரு மொழிக்குப் பின் வல்லினம் ம்கும். ஆ) ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தின் பின் வல்லினம் மிகும்.
இ) ஆறாம் வேற்றுமைத் தொகையில் வல்லினம் மிகாது. ஈ) விளித் தொடர்களில் வல்லினம் மிகாது.
விடை: இ) ஆறாம் வேற்றுமைத் தொகையில் வல்லினம் மிகாது.
8) கீழ்கண்ட கூற்றினை ஆராய்க
1. ழூன்றாம், ஆறாம் வேற்றுமை விரிகளில் வல்லினம் மிகாது. எழுவாய்த் தொடரில் வல்லினம் மிகாது.
2. இரண்டாம் வேற்றுமைத் தொகையில் வல்லினம் மிகாது.
அ) 1 மட்டும் சரி ஆ) 2 மட்டும் சரி
இ) 3 மட்டும் சரி ஈ) அனைத்தும் சரி
விடை: ஈ) அனைத்தும் சரி
9) கீழ்கண்ட கூற்றினை ஆராய்க
1. அடுக்குத் தொடரில் வல்லினம் மிகும்.
2. இரட்டைக் கிளவியில் வல்லினம் மிகும்.
3. கள் என்னும் அஃறிணைப் பன்மை விகுதி சேரும் போது வல்லினம் மிகாது.
அ) 1 மட்டும் சரி ஆ) 2 மட்டும் சரி
இ) 3 மட்டும் சரி ஈ) அனைத்தும் சரி
விடை: இ) 3 மட்டும் சரி
10) தவறானதைத் தேர்ந்தெடு:
அ) இரண்டாம் வேற்றுமைத் தொகையில் வல்லினம் மிகாது.
ஆ) வியங்கோள் வினைமுற்றுத் தொடரில் வல்லினம் மிகாது.
இ) சால, தவ, தட, குழ என்னும் உரிச்சொற்களின் பின் வல்லினம் மிகாது ஈ) அவ்வளவு, இவ்வளவு ஆகிய சொற்களின் பின் வல்லினம் மிகாது.
விடை: இ) சால, தவ, தட, குழ என்னும் உரிச்சொற்களின் பின் வல்லினம் மிகாது.
11) பின்வரும் கூற்றினை ஆராய்க
1. தனிக் குற்றெழுத்தை அடுத்து வரும் ஆகார எழுத்தின் பின் வல்லினம் மிகும்.
2. மூன்று, ஐந்து, ஆறாம் வேற்றுமைத் தொடர்களில் வல்லினம் மிகும்.
அ) 1 மட்டும் சரி ஆ) 2 மட்டும் சரி
இ) இரண்டும் சரி ஈ) இரண்டும் தவறு
விடை: அ) 1 மட்டும் சரி
12) பிரிக்கக் கூடியதும் பிரித்தால் பொருள் தருவதுமான சொல் _
அ) பகுபதம் ஆ) பகாப்பதம்
இ) வினை முற்று ஈ) இடைநிலை
விடை: அ) பகுபதம்
13) பகுபத உறுப்பிலக்கணம் வகைகள் _
அ) 4 ஆ) 5 இ) 6 ஈ) 8
விடை: இ) 6
14) சொல்லின் இறுதியில் நின்று திணை, பால், எண், இடம் காட்டுதாக அமைவது
அ) இடைநிலை ஆ) சந்தி
இ) சாரியை ஈ) விகுதி
விடை: ஈ) விகுதி
15) பகுதிக்கும் இடைநிலைக்கும் இடையில் வருவது
அ) விகாரம் ஆ) சந்தி
இ) சாரியை ஈ) விகுதி
விடை: ஆ) சந்தி
16) பகுபத உறுப்புகளில் ஏற்படும் மாற்றம்
அ) விகாரம் ஆ) சந்தி
இ) சாரியை ஈ) விகுதி
விடை: அ) விகாரம்
17) முளைத்தல் என்பது _
அ) வினைமுற்று ஆ) பெயரெச்சம்
இ) வினையெச்சம் ஈ) தொழிற்பெயர்
விடை: ஈ) தொழிற்பெயர்
18) பகுபத உறுப்புகளுள் அடங்தாமல் பகுதி, விகுதிக்கு நடுவில் காலத்தை உணர்த்தாமல் வரும் மெய்யெழுத்து
அ) எழுத்துப்பேறு ஆ) சாரியை
இ) அசை ஈ) சந்திப் பேறு
விடை: அ) எழுத்துப்பேறு
19) காலத்தைக் காட்டும் பகுபத உறுப்பு _
அ) பகுதி ஆ) விகுதி
இ) இடைநிலை ஈ) சந்தி
விடை: இ) இடைநிலை
20) செய் – என்னும் வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயரைத் தேர்ந்தெடு
அ) செய்நீர் ஆ) செய்வாய்
இ) செய்தவன் ஈ) செய்தான்
விடை: இ) செய்தவன்
21) சொற்களை ஒழுங்குபடுத்தி சரியான சொற்றொடராக்கு
அ) கல்லார்க்கும் கற்றார்க்கும் களிப்பருளும் களிப்பே
ஆ) கற்றார்க்கும் கல்லார்க்கும் களிப்பருளும் களிப்பே
இ) களிப்பே களிப்பருளும் கற்றார்க்கும் கல்லார்க்கும்
ஈ) களிப்பருளும் களிப்பே கற்றார்க்கும் கல்லார்க்கும்
விடை: அ) கல்லார்க்கும் கற்றார்க்கும் களிப்பருளும் களிப்பே
22) சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குதல்
அ) திறம்படவுரைப்பது குறத்திப் பாட்டே இறப்பு நிகழ்வெதிர் வென்னும் முக்காலமும்.
ஆ) முக்காலமும் வுரைப்பது குறத்திப்பாட்டே இறப்பு நிகழ்வெதிர் திறம்பட
வென்னும்.
இ) இறப்பு நிகழ்வெதிர் வென்னும் முக்காலமும் திறம்பட வுரைப்பது குறத்திப் பாட்டே
ஈ) குறத்திப் பாட்டே முக்காலமும் வுரைப்பது இறப்பு நிகழ்வெதிர் என்னும் திறப்பட
விடை: இ) இறப்பு நிகழ்வெதிர் வென்னும் முக்காலமும் திறம்பட வுரைப்பது குறத்திப் பாட்டே
23) விடைக்கேற்ற வினாவைத் தேர்க:
‘பெற்றதை வழங்கி வாழும் பெருங்குணம்
பெறுதல் இன்பம்’
அ) பெற்றதை வழங்தி வாழும் பெருங்குணத்தால் பெறுவது எது? ஆ) பெற்றதை வழங்கி ஏன் வாழ வேண்டும்?
இ) பெருங்குணம் எப்போது வரும்?
ஈ) பெறுவது எது?
விடை: அ) பெற்றதை வழங்தி வாழும் பெருங்குணத்தால் பெறுவது எது?
24) பொருந்தா இணையைக் கண்டறிக:
அ) தினம் – நாள்
ஆ) நெருநல் – நேற்று
இ) சலவர் – நல்லவர்
ஈ) மாரன் – மன்மதன்
விடை: இ) சலவர்- நல்லவர்
25) வேர்ச்சொல்லை தேர்க:
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்க
அ) பற்றுக ஆ) பற்றற்றான்
இ) பற்றி ஈ) பற்று
விடை: ஈ) பற்று
26) ‘நான்மணிமாலை’ – என்ற சொற்றொடர் குறிப்பது
அ) முத்து, வைரம், வெடூரியம், மாணிக்கம்
ஆ) முத்து, பவளம், மரகதம், மாணிக்கம்
இ) முத்து, மரகதம், செம்பு, மாணிக்கம்
ஈ) முத்து, பவளம், வைரம், மாணிக்கம்
விடை: ஆ) முத்து, பவளம், மரகதம், மாணிக்கம்
27) ‘சலவரைச் சாரா விடுதல் இனிதே’ ‘சலவர்’ – என்றச் சொல்லின் ஆங்கிலச் சொல்
அ) sorrow full person ஆ) Importer
இ) Violent person ஈ) Deceit full person
விடை: ஈ) Deceit full person
28) அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்
அ) சீராட்டு தாலாட்டு நீராட்டு பாராட்டு
ஆ) தாராட்டு சீராட்டு பாராட்டு சீராட்டு
இ) நீராட்டு பாராட்டு சீராட்டு தாலாட்டு
ஈ) பாராட்டு நீராட்டு தாலாட்டு சீராட்டு
விடை: அ) சீராட்டு தாலாட்டு நீராட்டு பாராட்டு
29) பின்வருவனவற்றில் பொருந்தும் இணையைத் தேர்ந்தெடு
செரு – செறு
அ) சண்டை – வயல்
ஆ) போர் – சிறிய
இ) போர்க்களம் – குளம்
ஈ) கோபப்படு – போரிடு
விடை: அ) சண்டை – வயல்
30) ‘கிளியை வளர்த்துப் பூனையின் கையில் கொடுத்தது போல’ – என்னும் உவமை உணர்த்தும் பொருள் யாது?
அ) இன்பம் ஆ) வருமுன் காத்தல்
இ) மகிழ்ச்சி ஈ) துன்பம்
விடை: ஈ) துன்பம்
31) ‘அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க’-
அ) வைகுதல் வைகறை வைகலும் வைகல்
ஆ) வைகறை வைகுதல் வைகல் வைகலும்
இ) வைகலும் வைகல் வைகுதல் வைகறை
ஈ) வைகல் வைகலும் வைகறை வைகுதல்
விடை: ஈ) வைகல் வைகலும் வைகறை வைகுதல்
32) இலக்கணக் குறிப்பு சொல்லைத் தேர்க: ‘பண்பு பெயர்’
அ) திட்பம் ஆ) ஆட்டம்
இ) கோடல் ஈ) பெறுதல்
விடை: அ) திட்பம்
33) அகரவரிசைப்படி சொற்களைச் சீர் செய்க
அ) தோப்பு துப்பு தீர்ப்பு தப்பு
ஆ) துப்பு தோப்பு தப்பு தீர்ப்பு
இ) தப்பு தீர்ப்பு துப்பு தோப்பு
ஈ) தப்பு தீர்ப்பு தோப்பு துப்பு
விடை: இ) தப்பு தீர்ப்பு துப்பு தோப்பு
34) சொற்களை ஒழுய்குபடுத்தி சொற்றொடராக்கு
அ) தமிழில் பேசுதல் தமிழறிந்தாரிடம் தமிழர் தகுதி மிகு பண்பாகும் ஆ) தமிழறிந்தாரிடம் தமிழர் தகுதி மிக பண்பாகும் தமிழில் பேசுதல்.
இ) தகுதி மிகு பண்பாகும் தமிழில் பேசுதல் தமிழறிந்தாரிடம் தமிழர். ஈ) தமிழர் தமிழறிந்தாரிடம் தமிழில் பேசுதல் தகுதி மிகு பண்பாகும்.
விடை: ஈ) தமிழர் தமிழறிந்தாரிடம் தமிழில் பேசுதல் தகுதி மிகு பண்பாகும்.
35) விடைக்கேற்ற வினாவைத் தேர்க:
” மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் சொல்வதிலோர் மகிமை இல்லை”
அ) தமிழர்க்குப் பெருமை தராதது எது?
ஆ) நமக்குள்ளே பேசுவது எது?
இ) பழங்கதைகளால் என்ன நன்மை?
ஈ) பழங்கதைகளின் மகிமை யாது?
விடை: அ) தமிழர்க்குப் பெருமை தராதது எது?
36) விடைக்கேற்ற வினாவைத் தேர்க:
‘ இரட்டைக் கிளவி இரட்டிற் பிரிந்திசையா’
அ) இரட்டைக் கிளவி இரட்டித்தால் என்னவாகும்?
ஆ) இரட்டைக் கிளவி எவ்விடத்தல் வரும்?
இ) இரட்டுறப் பிரிந்திசை யாதது எது?
ஈ) இரட்டிற் பிரிந்திசைப்பது எது?
விடை: இ) இரட்டுறப் பிரிந்திசை யாதது எது?
37) பிரித்தெழுதுக: நெடுநாவாய்
அ) நெடு + நாவாய் ஆ) நெடுமை + நா + வாய்
இ) நெடுமை + நாவாய் ஈ) நெடுநா + வாய்
விடை: இ) நெடுமை + நாவாய்
38) ‘கடலில் கரைந்த பெருங்காயம் போல’ இந்த உவமை வாக்கியம் உணர்த்தும் பொருள் _
அ) பகர்தல் ஆ) கலத்தல்
இ) வீணாதல் ஈ) ஏமாறல்
விடை: இ) வீணாதல்
39) விடை தேர்க:
சரியான சொற்றெடரைத் தேர்க
அ) தாழ்வு உயர்வு கருதல் பிறப்பில் தவறு
ஆ) பிறப்பில் உயர்வு தாழ்வு கருதல் தவறு
இ) பிறப்பில் உயர்வு கருதல் தாழ்வு தவறு
ஈ) உயர்வு கருதல் பிறப்பில் தாழ்வு தவறு
விடை: ஆ) பிறப்பில் உயர்வு தாழ்வு கருதல் தவறு
40) கீழ்க்காணும் வாக்கியங்களில் எவை சரியானவை?
1. எனது மகன் சரியான நெஞ்சழுத்தக்காரன்
2. அவனது தந்தை அவள் மீது உயிரையே வைத்திருக்கிறார்
3. நம் கூற்று சிறிதும் ஏற்கத்தக்கது அன்று
4. அவை எல்லாம் மாதவியின் நூல்கள்
அ) 1 மற்றும் 3 ஆ) 2 மற்றும் 4
இ) 3 மற்றும் 4 ஈ) 2 மற்றும் 3
விடை: இ) 3 மற்றும் 4
41) வரை – இவ்வேர்ச் சொல்லை வினையாலணையும் பெயதாக்குக
அ) வரைதல் ஆ) வரைந்த
இ) வரைந்தவன் ஈ) வரைந்து
விடை: இ) வரைந்தவன்
42) பொருத்துக
1. டெலிகேட் – கருத்துரு
2. சாம்பியன் – மரபுத் தகவு
3. புரபோசல் – பேராளர்
4. புரோட்டோகால் – வாகைசு+டி
அ) 1342 ஆ) 3214
இ) 3412 ஈ) 2143
விடை: இ) 3412
43) பொருத்துக
1. சரதம் – நிலா முற்றம்
2. சு+ளிகை – நாடு
3. மகோததி – வாய்மை
4. அவனி – கடல்
அ) 3142 ஆ) 2134 இ) 3214 ஈ) 1432
விடை: அ) 3142
44) கீழ்க்காணும் கருத்துகளில் தவறானதைச் சுட்டிக் காண்பிக்கவும்: கருத்துக்கள்
அ) மிளகு நீரைச் (சாற்றமுது) சாத்தமுது என்பது வைணவ மரபு ஆ) ஆசிரியரை ‘ஐயா’ என்றே அழைப்பது வேலூர் ஆம்பூர் வட்டத்தார் மரபு
இ) அமிழ்தத்தைக் கருப்பஞ்சாறு என்பது சீரங்கம் கோவில் மரபு
ஈ) திருமணம் முதலிய மங்கல நிகழ்ச்சிகளுக்குக் கீற்று வேய்வதனைக் கொட்டகை என்பது செட்டிநாட்டு மரபு
விடை: இ) அமிழ்தத்தைக் கருப்பஞ்சாறு என்பது சீரங்கம் கோவில் மரபு
45) தவறாகப் பிரிக்கப்பட்டுள்ள சொல்லைத் தேர்க:
அ) வெண்மதி ஸ்ரீ வெண் + மதி
ஆ) வெந்துவர்ந்து ஸ்ரீ வெந்து + உவர்ந்து
இ) காடிதனை ஸ்ரீ காடு + இதனை
ஈ) கருமுகில் ஸ்ரீ கருமை + முகில்
விடை: அ) வெண்மதி ஸ்ரீ வெண் + மதி
46) பொருத்துக
1. Internet – மின் இதழ்
2. Search Engine – மின் நூல்
3. E – Journal – மின் இணையம்
4. E – Book – தேடு பொறி
அ) 4213 ஆ) 2431 இ) 3412 ஈ) 1324
விடை: இ) 3412
47) பொருந்தாதச் சொல்லைக் கண்டறிக
தத்தை, சுகம், வெற்பு, கிள்ளை
அ) சுகம் ஆ) கிள்ளை
இ) வெற்பு ஈ) தத்தை
விடை: இ) வெற்பு
48) பொருட்டன்று – பிரித்து எழுதுக
அ) பொருட் + அன்று ஆ) பொரு + அன்று
இ) பொருட்டு + அன்று ஈ) பொருட் + டன்று
விடை: இ) பொருட்டு + அன்று
49) அகரவரிசைப்படி அமைந்துள்ளதைக் கண்டறிக:
அ) மீமிசை, முந்நநீர், மொழிபெயர்ப்பு, மேடு பள்ளம், மனத்துயர் ஆ) மனத்துயர், மீமிசை, முந்நீர், மேடுபள்ளம், மொழிபெயர்ப்பு
இ) முந்நீர், மீமிசை, மனத்துயர், மொழிபெயர்ப்பு, மேடுபள்ளம் ஈ) மனத்துயர், மேடுபள்ளம், முந்நீர், மீமிசை, மொழிபெயர்ப்பு
விடை: ஆ) மனத்துயர், மீமிசை, முந்நீர், மேடுபள்ளம், மொழிபெயர்ப்பு
50) அகரவரிசைப்படி சரியாக அமைந்த சொல்வரிசையைக் குறிப்பிடுக
அ) அமிர்தம், அமிழ்து, அமிழ்தம், அமிழ்தல்
ஆ) ஈரம், ஈரல், ஈருயிர், ஈகை
இ) கண், கண்டம், கண்டு, கண்ணி
ஈ) தகடு, தகழி, தகவு, தகர்
விடை: இ) கண், கண்டம், கண்டு, கண்ணி
51) ‘அப்பிசி மாசம் அடமள இம்பாங்க’ – இத்தொடரில் பிழைநீங்கிய வடிவம்
அ) ஐப்பசி மாசம் அடமழைம்பாங்க
ஆ) ஐப்பசி மாதம் அடமழை என்பாங்க
இ) ஐப்பசி மாதம் அடமழ என்பார்கள்
ஈ) ஐப்பசி மாதம் அடமழை என்பார்கள்
விடை: ஈ) ஐப்பசி மாதம் அடமழை என்பார்கள்
52) ‘இன்மையுள் இன்மை விருந்தொரால்’ – இதில் விருந்து என்பதன் இலக்கணக் குறிப்பு
அ) பண்பு பெயர் ஆ) வினையாலணையும் பெயர்
இ) பண்பாகு பெயர் ஈ) வியங்கோள் வினைமுற்று
விடை: இ) பண்பாகு பெயர்
53) பொருத்துக
1. கொண்டல் – மாலை
2. தாமம் – வளம்
3. புரிசை – மேகம்
4. மல்லல் – மதில்
அ) 3142 ஆ) 3412 இ) 3214 ஈ) 3241
விடை: அ) 3142
54) பாந்தள், உரகம், பன்னகம், பணி என்னும் சொற்களின் பொருள் _ என்பதாகும்.
அ) கரடி ஆ) யானை
இ) முதலை ஈ) பாம்பு
விடை: ஈ) பாம்பு
55) சொற்களை ஒழுங்குபடுத்துக
“ஆற்றல் நிரம்பிய சொற்கள் கவிதை தாமாகப் பொங்கி வழிவது தான்”
அ) தாமாகப் பொங்கி வழிவதுதான் கவிதை ஆற்றல் நிரம்பிய சொற்கள் ஆ) ஆற்றல் நிரம்பிய கவிதை சொற்கள் தாமாகப் பொங்கி வழிவது தான்
இ) ஆற்றல் கவிதை நிரம்பிய சொற்கள் தாமாகப் பொங்கி வழிவது தான் ஈ) ஆற்றல் நிரம்பிய சொற்கள் தாமாகப் பொங்கி வழிவது தான் கவிதை
விடை: ஈ) ஆற்றல் நிரம்பிய சொற்கள் தாமாகப் பொங்கி வழிவது தான் கவிதை
56) சொற்களை ஒழுங்குபடுத்துக
வியனகர் குறைபடாக் கொளக் கூமுடை கொளக்
அ) கொளக் கொளக் கூழுடை வியனகர் குறைபடாக் ஆ) கூழுடை வியனகர் குறைபடாக் கொளக் கொளக்
இ) கொளக் கூழுடைய வினயகர் கொளக் குறைவடக் ஈ) கொளக் கொளக் குறைபடர்க் கூழுடை வியனகர்
விடை: ஈ) கொளக் கொளக் குறைபடர்க் கூழுடை வியனகர்
57) கீழ்க்காணும் சொற்களை அகரவரிசைபடுத்து கற்றம் சீர்தூக்கு சிந்தனை சாட்டை சங்கு
அ) சீர்தூக்கு, சங்கு, சிந்தனை, சாட்டை, சுற்றம் ஆ) சிந்தனை, சீர்தூக்கு, சங்கு, சுற்றம், சாட்டை
இ) சாட்டை, சுற்றம், சீர்தூக்கு, சிந்தனை, சங்கு
ஈ) சங்கு, சாட்டை, சிந்தனை, சீர்தூக்கு, சுற்றம்
விடை: ஈ) சங்கு, சாட்டை, சிந்தனை, சீர்தூக்கு, சுற்றம்
58) ஆங்கில சொல்லுக்கு இணையான தமிழ் சொல்லை தேர்வு செய்க?
” இன்கம் டேக்ஸ் ஆஃபிஸ்”?
அ) வருமானத் துறை அலுவலகம்
ஆ) வருமான வரி அலுவலகம்
இ) வருமான அலுவலகம்
ஈ) வருவாய் அலுவலகம்
விடை: ஆ) வருமான வரி அலுவலகம்
59) வழூஉச் சொல்லற்ற தொடர் எது?
1. வலது பக்கம் சுவறில் எழுதாதே
2. வலப் பக்கம் சுவரில் எழுதாதே
3. வலப் பக்கம் சுவற்றில் எழுதாதே
4. வலப் பக்கச் சுவறில் கழுதாதே
அ) 4 ஆ) 1 இ) 2 ஈ) 3
விடை: இ) 2
60) அணித்து – எதிர்ச் சொல்லைக் கண்டற்க
அ) தொலைவில் ஆ) உய்த்து
இ) கொடுத்து ஈ) அளத்தல்
விடை: அ) தொலைவில்
61) சேர்த்து எழுதுக: பனை + ஓலை
அ) பனையோலை ஆ) பனைஓலை
இ) பனைவோலை ஈ) பனைவ்வோலை
விடை: அ) பனையோலை
62) தாயொப்பப் பேசும் மகள் என்ற உவமைத் தொடருக்குப் பொருள்?
அ) தந்தையைப் போன்று பேசுதல்
ஆ) தங்கையைப் போன்று பேசுதல்
இ) தாயைப் போன்று பேசுதல்
ஈ) தம்பியைப் போன்று பேசுதல்
விடை: இ) தாயைப் போன்று பேசுதல்
63) விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க
பாரதிதாசன் புரட்சித் கவிஞர் என அழைக்கப்படுகிறார்
அ) பாரதிதாசன் புரட்சிக் கவிஞர் என அழைக்கப்படுகிறாரா? ஆ) புரட்சிக் கவிஞர் என அழைக்கப்படுபவர் யார்?
இ) பாரதிதாசன் புரட்சிக்கவி என அழைக்கப்படுவதேன்? ஈ) பாரதிதாசன் எவ்வாறு அழைக்கப்படுகிறார்?
விடை: ஈ) பாரதிதாசன் எவ்வாறு அழைக்கப்படுகிறார்?
64) அகர வரிசையில் எழுதுக
மொழி பெயர்ப்பு, முந்நீர், மேடுபள்ளம், மனத்துயர், மீமிசை
அ) முந்நீர், மனத்துயர், மீமிசை, மொழிபெயர்ப்பு, மேடுபள்ளம் ஆ) மேடுபள்ளம், முந்நீர், மீமிசை, மொழிபெயர்ப்பு, மனத்துயர்
இ) மீமிசை, முந்நீர், மொழிபெயர்பபு, மனத்துயர், மேடுபள்ளம் ஈ) மனத்துயர், மீமிசை, முந்நீர், மேடுபள்ளம், மொழிபெயர்ப்பு
விடை: ஈ) மனத்துயர், மீமிசை, முந்நீர், மேடுபள்ளம், மொழிபெயர்ப்பு
65) எச்சொல் வேர்ச்சொல் அல்ல?
அ) அடி ஆ) இரு இ) அறி ஈ) இனிது
விடை: ஈ) இனிது
66) வந்தான் – வேர்ச்சொல்லைத் தருக?
அ) வார் ஆ) வா இ) வரு ஈ) வந்து
விடை: ஆ) வா
67) ‘மா’ ஓரெழுத்து ஒரு மொழியின் பொருளை அறிக
அ) யானை ஆ) விலங்கு இ) மாடு ஈ) காடு
விடை: ஆ) விலங்கு
68) வழுஉச் சொல் இல்லாத தொடரை எழுதுக
அ) சென்னைக்கு அருகாமையில் இருப்பது மதுரை அல்ல ஆ) சென்னைக்கு பக்கத்தில் இருப்பது மதுரை அல்ல
இ) சென்னைக்கு அருகாமையில் இருப்பது மதுரை அல்லை ஈ) சென்னைக்கு அருகில் இருப்பது மதுரை அன்று
விடை: ஈ) சென்னைக்கு அருகில் இருப்பது மதுரை அன்று
69) பொருந்தாச் சொல்லைத் தேர்வு செய்க
அ) உள்ளம் ஆ) அழகு இ) வீடு ஈ) இடம்
விடை: ஆ) அழகு
70) பிழையான கூற்றைக் கண்டறிக
அ) உம்மைத் தொகையில் வரும் வல்லினம் மிகாது ஆ) இரட்டைக் கிளவியில் வல்லினம் மிகாது
இ) வினைத்தொகையில் வரும் வல்லினம் மிகாது ஈ) வன்றொடர்க் குற்றியலுகரத்தின் பின்வரும் வல்லினம் மிகாது
விடை: ஈ) வன்றொடர்vக் குற்றியலுகரத்தின் பின்வரும் வல்லினம் மிகாது
71) பிழையான தொடரைக் கண்டறிக?
அ) சுட்டெழுத்துகளுக்குப் பின் வல்லினம் மிகும் ஆ) ஓரெழுத்து ஒரு மொழிக்குப் பின் வல்லினம் மிகும்
இ) உவமைத் தொகையில் வல்லினம் மிகும்
ஈ) இரட்டைக்கிளவியில் வல்லினம் மிகும்
விடை: ஈ) இரட்டைக்கிளவியில் வல்லினம் மிகும்
72) பொருத்துக:
1) செக் – கடவுச்சீட்டு
2) பைல் – நுழைவு இசைவு
3) விசா – கோப்பு
4) பாஸ்போர்ட் – காசோலை
அ) 4321 ஆ) 4312 இ) 3142 ஈ) 2431
விடை: அ) 4321
73) உடன்பாட்டு வினையை எதிர்மறை வினையாக மாற்று : வந்தான்
அ) வருவான் ஆ) வந்திலன்
இ) வருகிறான் ஈ) வருகின்றான்
விடை: ஆ) வந்திலன்
74) கிலி, கிழி, கிளி போன்ற சொற்களுக்குச் சரியான பொருள் வேறுபாட்டைத் தேர்வு செய்க?
அ) பயம், கிழித்தல், ஒரு பறவை
ஆ) கிழித்தல், ஒருபறவை, பயம்
இ) கிழித்தல், பயம், ஒரு பறவை
ஈ) ஒரு பறவை, பயம், கிழித்தல்
விடை: அ) பயம், கிழித்தல், ஒரு பறவை
75) பெற்றான் – வேர்ச் சொல்லைக் கண்டறி
அ) பெற்ற ஆ) பெற்று இ) பெறு ஈ) பேறு
விடை: இ) பெறு
76) அகரவரிசைப்படி அமைந்துள்ளதை எழுதுக
அ) செப்பு, சென்னை, செல்வம், செடி
ஆ) செடி, செப்பு, செல்வம், சென்னை
இ) செப்பு, செல்வம், சென்னை, செடி
ஈ) செடி, செல்வம், செப்பு, சென்னை
விடை: ஆ) செடி, செப்பு, செல்வம், சென்னை
77) காலங்களில் தெருவில் மழை வைக்காதீர் காலை – சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடர் உருவாக்க
அ) மழைக்காலங்களில் வைக்காதீர் காலை தெருவில் ஆ) தெருவில் வைக்காதர் காலை மழைக்காலங்களில்
இ) மழைக்காலங்களில் தெருவில் காலை வைக்காதீர் ஈ) வைக்காதீர் காலை காலங்களில் மழைத் தெருவில்
விடை: இ) மழைக்காலங்களில் தெருவில் காலை வைக்காதீர்
78) கொல்லையிலே வாழை, பலா, மாங்கனிகள் குலுங்கும்
இவ்விடைக்கேற்ற வினாவினை எழுதுக?
அ) எது குலுங்கும்?
ஆ) எதுகள் குலுங்கும்?
இ) கொல்லையிலே குலுங்குவன யாவை?
ஈ) எதுவும் குலுங்கவில்லை
விடை: இ) கொல்லையிலே குலுங்குவன யாவை?
79) ‘கொக்கொக்க கூம்பும் பருவத்து’ – இவ்வுவமையால் விளக்கப்படும் பொருள்?
அ) கொக்கை போன்ற வெள்ளை உள்ளம்
ஆ) காலமறிந்து விரைந்து செயல்படுதல்
இ) பொறுமையோடு இருத்தல்
ஈ) எதையும் கண்டு கொள்ளாமல் இருத்தல்
விடை: ஆ) காலமறிந்து விரைந்து செயல்படுதல்
80) பின்வருவனவற்றுள் இரட்டைக்கிளவி எது?
அ) கலகலவெனச் சிரித்தாள்
ஆ) வருக வருக என வரவேற்றான்
இ) பார்த்துப் பார்த்துப் பேசினான்
ஈ) நொந்தேன் நொந்தேன்
விடை: அ) கலகலவெனச் சிரித்தாள்
81) ‘குயில்கள் கூவியது’ என்பது
அ) பால் வழு ஆ) திணை வழு
இ) எண் வழு ஈ) இட வழு
விடை: இ) எண் வழு
82) ‘சீதையைக் கண்டேன்’ என்னும் தொடர்
அ) விளித் தொடர் ஆ) பெயரெச்சத் தொடர்
இ) வினைமுற்றுத் தொடர் ஈ) உரிச்சொற்றொடர்
விடை: இ) வினைமுற்றுத் தொடர்
83) பிழை நீக்கி எழுதுக?
அ) கண்டது கூறவே ஆ) கண்டதை கூறவே
இ) காண்பது கூறவே ஈ) கண்டதனைக் கூறவே
விடை: ஈ) கண்டதனைக் கூறவே
84) “ஒறுத்தாரை ஒன்றாக வையாரே” -இத்தொடரில் ஒறுத்தார் என்பதன் இலக்கணக்குறிப்பு
அ) முற்றெச்சம் ஆ) தொழிற் பெயர்
இ) வினையாலணையும் பெயர் ஈ) வினையெச்சம்
விடை: இ) வினையாலணையும் பெயர்
85) ‘உவமைத் தொகை’ இலக்கணக் குறிப்பிற்கு பொருந்தாத சொல்லை காண்க
அ) கயல்விழி ஆ) மலர்முகம்
இ) வெண்ணிலவு ஈ) தாமரைக் கண்கள்
விடை: இ) வெண்ணிலவு
86) “ஆiபாவ ளை சiபாவ” – இதன் தமிழாக்கம்
அ) ‘கடமையே உரிமை’
ஆ) ‘வல்லான் வகுத்ததே வாய்க்கால்’
இ) ‘வலிமையே சரியான வழி
ஈ) ‘ஒற்றுமையே வலிமை’
விடை: ஆ) ‘வல்லான் வகுத்ததே வாய்க்கால்’
87) அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க
அ) நைதல் நாடு நொச்சி நுங்கு
ஆ) நுங்கு நொச்சி நாடு நைதல்
இ) நொச்சி நுங்கு நைதல் நாடு
ஈ) நாடு நுங்கு நைதல் நொச்சி
விடை: ஈ) நாடு நுங்கு நைதல் நொச்சி
88) பொருத்துக
பிறமொழிச் சொல் – தமிழ்ச் சொல்
அ) ஐதீகம் – விருந்தோம்பல் ஆ) இருதயம் – சொத்து
இ) ஆஸ்தி – உலக வழக்கு ஈ) உபசரித்தல் – நெஞ்சகம்
விடை:
அ) 2314 ஆ) 3421 இ) 4123 ஈ) 1234
விடை: ஆ) 3421
89) அகரவரிசையில் அமைந்துள்ள சொற்களைக் கண்டறிக
அ) காசு, கூறை, கைப்பிடி, கிளி, கேனி
ஆ) காசு, கிளி, கூறை, கேணி, கைப்பிடி
இ) கிளி, கைப்பிடி, காசு, கூறை, கேணி
ஈ) கேணி, காசு, கிளி, சுறை, கைப்பிடி
விடை: ஆ) காசு, கிளி, கூறை, கேணி, கைப்பிடி
90) பொருத்துக
1. காகம் – கூவும்
2. குதிரை – கரையும்
3. சிங்கம் – கனைக்கும்
4. குயில் – முழங்கும்
அ) 1342 ஆ) 4312 இ) 2413 ஈ) 2341
விடை: ஈ) 2341
91) பிழையற்றத் தொடரைத் தேர்வு செய்க
அ) ஓர் மாவட்டத்தில் ஒரு அமைச்சர் அவருடைய மகனோடு கற்றுலா மேற்கொண்டார்
ஆ) ஒரு மாவட்டத்தில் ஓர் அமைச்சர் அவருடைய மகனோடு சுற்றுலா மேற்கொண்டார்
இ) ஒரு மாவட்டத்தில் ஒரு அமைச்சர் அவரது மகனோடு சுற்றுலா மேற்கொண்டார்
ஈ) ஒரு மாவட்டத்தில் ஒரு அமைச்சர் அவரது மகனோடு சுற்றுலா மேற்கொண்டார்
விடை: ஆ) ஒரு மாவட்டத்தில் ஓர் அமைச்சர் அவருடைய மகனோடு
92) கரணத்தேர்
அ) கரணம் + தேர் ஆ) காரணத்து+ + ஏர்
இ) கரன் + அத்து + ஏர் ஈ) காரணம் + தேர்
விடை: ஆ) காரணத்து + தேர்
93) மாறியுள்ள சீர்களை முறைபடுத்து
அ) குணநலம் நலனே சான்றோர் பிறநலம்
ஆ) சான்றோர் நலனே குணநலம் பிறநலம்
இ) குணநலம் சான்றோர் நலனே பிறநலம்
ஈ) சான்றோர் குணநலம் நலனே பிறநலம்
விடை: இ) குணநலம் சான்றோர் நலனே பிறநலம்
94) மாறியுள்ள சீர்களை முறைபடுத்து
அ) இல்லாரை எள்ளுவர் செல்வரை எல்லாரும்
ஆ) இல்லாரை செல்வரை எல்லாரும் எள்ளுவர்
இ) இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செவ்வரை
ஈ) செல்வரை எல்லாரும் எள்ளுவர் இல்லாரை
விடை: இ) இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செவ்வரை
95) கீழ்க்காணும் தொடரில் சரியான விடையை தேர்வு செய்
அ) யானையின் கண் சிறியது
ஆ) யானையின் கண்கள் சிறியது
இ) யானையின் கண்கள் சிறியன
ஈ) யானையின் கண் சிறியன
விடை: இ) யானையின் கண்கள் சிறியன
96) ஓடையில் யானையும் யானைக __ ம் நின்றன
அ) யானைக் கன்று ஆ) யானைக் குட்டி
இ) யானைக் குருளை ஈ) யானைப்பிள்ளை
விடை: அ) யானைக் கன்று
97) சுநகசபைநசயவழச – என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்
அ) குளிர்பதனப் பெட்டி ஆ) குளிரூட்டும் பெட்டி
இ) குளிர்சாதனப் பெட்டி ஈ) குளிர் காக்கும் பெட்டி
விடை: ஆ) குளிரூட்டும் பெட்டி
98) உவமை விளங்கும் பொருளை பொருத்துக
1) அத்திப் பூத்தது போல – ஒற்றுமை
2) உயிரும் உடம்பும் போல – பயனில்லை
3) ஆற்றில் கரைத்த புளி – வேதனை
4) இடிவிழுந்த மரம் – அரிய செயல்
அ) 3142 ஆ) 2341 இ) 4123 ஈ) 4213
விடை: இ) 4123
99) சரியான பொருளைத் தேர்ந்தெடு “உருமு”
அ) இடுப்பு ஆ) இடி இ) மேகம் ஈ) கதிரொளி
விடை: ஆ) இடி
100) “புள்ளுறு புன்கண் தீர்த்தோன்” இவ்வடியில் இடம்பெறும் பறவை?
அ) காகம் ஆ) கிளி இ) புறா ஈ) ஆந்தை
விடை: இ) புறா
101) பொருந்தாச் சொல்லை கண்டறி
மாணிக்கம், முத்து, பவளம், கிளிஞ்சல்
அ) மாணிக்கம் ஆ) முத்து இ) பவளம் ஈ) கிளிஞ்சல்
விடை: ஈ) கிளிஞ்சல்
102) ஆற்றீர் – பகுபத உறுப்பிலக்கணத்தின் படி எவ்வாறு பிரியும்?
அ)ஆற்று + ஈர் ஆ) ஆறு + ஈர்
இ) ஆ + இற்று + ஈர் ஈ) ஆற்று +ஆ+ ஈர்
விடை: ஈ) ஆற்று +ஆ+ ஈர்
சமூகம் மற்றும் பயிற்சி
TNPSC மற்றும் அரசு தேர்வுகள் போன்ற தேர்வுகளுக்கு, இந்த பகுபத உறுப்பிலக்கணம் வினா-விடைகள் உங்கள் தேர்வு தயாரிப்பில் மிகவும் உதவிகரமாக இருக்கும். அவற்றை பழகி, உங்கள் தமிழ் அறிவை மேம்படுத்துங்கள்!
🌐 முக்கிய வலைதளம் மற்றும் சமூக ஊடகக் குழுக்கள்:
- 🌍 எங்களது அதிகாரப்பூர்வ வலைதளம்: Tamil Mixer Education
- 💬 WhatsApp குழு: Tamil Mixer Education WhatsApp Group
- 📢 Telegram: Jobs and Notes
- 📷 Instagram: Tamil Mixer Education Instagram
📂 பி.டி.எப் தொகுப்புகள்:
- 📄 TNPSC Notes PDF Collection: TNPSC Notes PDF
- 📘 Test Series PDF Collection: Test Series PDFs
- 🗂️ Old Question Paper PDF Collection: Old Question Papers
- 🕉️ Hindu Aranilaiyathurai Notes PDF Collection: Hindu Aranilaiyathurai Notes
- 📚 All Exam Notes: All Exam Notes
🚀 பகுபத உறுப்பிலக்கணம் முக்கிய வினா-விடைகள் க்விஸ் பதிவிறக்கம் செய்து, உங்கள் தேர்வு தயாரிப்பை மேம்படுத்துங்கள்!