அங்கக முறையில்
விவசாயம் – தரச்சான்றுக்கு விண்ணப்பிக்கலாம்
அங்கக
முறையில் சாகுபடி செய்யும்
விவசாயிகள் தரச்சான்றுக்கு விண்ணப்பிக்கலாம் என திண்டுக்கல் அங்ககச்சான்று உதவி
இயக்குனர் சந்திரமாலா தெரிவித்தார்.
அவர் தெரிவித்தது:
அங்கக
முறையில் உற்பத்தி செய்யும்
வேளாண், தோட்டக்கலை பயிர்களுக்கு மத்திய அரசு தரச்சான்று வழங்குகிறது. ரசாயனம் இல்லாமல்
அங்கக முறையில் சாகுபடி
செய்யும் பயிர்கள், காய்கறிகள், பழங்களுக்கு சந்தையில் நல்ல
விலை கிடைப்பதுடன் சுற்றுச்சூழல் மாசு குறைகிறது.
குறைந்த
செலவில் பூச்சி, நோய்
தாக்குதல் இல்லாமல் பயிர்கள்
வளர அங்கக தொழில்
நுட்பங்களை பயன்படுத்தி விளைவித்த
பொருட்களுக்கு அரசு
சான்று வழங்குகிறது.தரச்சான்று பெற விரும்புவோர் தனிநபராக,
குழுவாக பதிவு செய்யலாம்.
வணிக
நிறுவனங்கள், கால்நடை வளர்ப்போர், தேனீ வளர்ப்பு, வனபொருள்
சேகரிப்பு செய்வோரும் பதிவு
செய்யலாம்.பதிவு கட்டணம்
ஓராண்டுக்கு சிறு குறு
விவசாயிகள் ரூ.2700, பிற
விவசாயிகள் ரூ.3200, குழுவாக
பதிவு செய்தால் ரூ.7200,
வணிக நிறுவனங்களுக்கு ரூ.9400.
அங்கக
சான்றளிப்பிற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் பண்ணையின்
பொது விபர குறிப்பு,
வரைபடம், மண், பாசன
நீர் பரிசோதனை விபரம்
ஆதார் விபரங்களுடன் விண்ணப்பிக்கலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

