80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அஞ்சல் முறையில்
வாக்களிக்கும் வாய்ப்பு
ஐந்து
மாநில சட்டப்பேரவைத் தேர்தல்
நடைபெற உள்ள மாநிலங்களில் 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அஞ்சல்
முறையில் வாக்களிக்கும் முறை
வாய்ப்பாக அளிக்கப்படும் என்று
தலைமைத் தேர்தல் அதிகாரி
தெரிவித்துள்ளார்.
தமிழகம், புதுச்சேரி, கேரளத்துக்கு தேர்தல் தேதி: Click
Here
அவர்
கூறுகையில், தமிழகம், புதுச்சேரி, கேரளம், மேற்குவங்கம், அசாம்
உள்ளிட்ட 5 மநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தலில் 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அஞ்சல் முறையில்
வாக்களிக்கும்முறை ஒரு
வாய்ப்பாக வழங்கப்படும்.
விருப்பம்
உள்ள 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே அஞ்சல் முறையில்
வாக்களிக்கும் முறையைப்
பயன்படுத்திக் கொள்ளலாம்.
தமிழகம்,
புதுச்சேரி, கேரளம், மேற்குவங்கம், அசாம் ஆகிய ஐந்து
மாநிலங்களில் நடைபெற
உள்ள சட்டப்பேரவைத் தேர்தல்
தேதி குறித்த அட்டவணையை
அவர் வெளியிட உள்ளார்.
செய்தியாளர்கள் கூட்டத்தில் சுநீல் அரோரா
மேலும் கூறுகையில், கரோனா
அச்சுறுத்தல் இருந்தாலும், சுகாதாரத்துறையினர் மூலம்
அதனை எதிர்கொண்டு வருகிறோம்.
தேர்தல் பணியில், மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட
முன்களப் பணியாளர்களின் பணி
பெரும் பங்கு வகிக்கும்
என்றார்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


