HomeBlogமுதுநிலை ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க அவகாசம்

முதுநிலை ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க அவகாசம்

முதுநிலை ஆசிரியர்
பணிக்கு விண்ணப்பிக்க அவகாசம்

முதுநிலை
ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர்,
கணினி பயிற்றுநர் பணிக்கு
விண்ணப்பிக்க கால
அவகாசம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்
தேர்வு வாரியம் (TRB)
மூலம் முதுகலை ஆசிரியர்,
உடற்கல்வி இயக்குநர் நிலை-1,
கணினி பயிற்றுநர் நிலை-1
பணியிடங்களில் சேர
கடந்த ஆகஸ்ட் மாதம்
9
ம் தேதி முதல்
விண்ணப்பங்கள் இணைய
வாயிலாக பெறப்பட்டு வருகிறது.

ஏற்கெனவே
October 31 வரை அவகாசம்
அளித்த நிலையில் ஆசிரியர்களுக்கு வயது உச்ச வரம்பு
தற்போது அதிகரிக்கப்பட்டதால் நவ.9
வரை மேலும் அவகாசம்
அளித்து ஆசிரியர் தேர்வு
வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

முன்னதாக
பள்ளி ஆசிரியர் நியமனத்தின் உச்ச வயது வரம்பை 5 ஆண்டுகள் அதிகரித்து தமிழக அரசு அண்மையில்
உத்தரவிட்டது. இந்த
தளர்வு 2022 இறுதிவரை மட்டுமே
பொருந்தும் என அந்த
அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular