கியூட் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம்
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் ஒருங்கிணைந்த ஐந்தாண்டு படிப்புகளுக்கான கியூட்
தேர்வுக்கு விண்ணப்பிக்க, வரும்
22ம் தேதி வரை
காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, புதுச்சேரி பல்கலைக்கழக உதவி பதிவாளர்(மக்கள் தொடர்பு) மகேஷ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
மத்திய
பல்கலைக்கழகமான புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் உள்ள
10 ஒருங்கிணைந்த ஐந்தாண்டு
பட்டப்படிப்புகளுக்கு இந்தாண்டு
மாணவர் சேர்க்கைக்கு ‘கியூட்‘
பொது நுழைவு தேர்வு
நடத்தப்பட உள்ளது.எம்.எஸ்.சி.,
ஐந்தாண்டு படிப்புகளான அப்ளைடு
ஜியோலஜி, வேதியியல், இயற்பியல்,
கணிதம், கம்ப்யூட்டர் சயின்ஸ்,
புள்ளியியல், எம்.ஏ.,
ஐந்தாண்டு படிப்புகளுக்கான வரலாறு,
அரசியல் அறிவியல், சோசியாலஜி,
சமூக பொருளாதார நிர்வாக
சட்டம்(சீல்) உள்ளிட்ட
படிப்புகளுக்கு கடந்த
6ம் தேதி வரை
https://cuet.samarth.ac.in என்ற
இணையதளத்தில் விண்ணப்பம் வரவேற்கப்பட்டது.
இந்நிலையில், இப்படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடுவை, வரும்
22ம் தேதி மாலை
5:00 மணி வரை, தேசிய
தேர்வு முகமை நீட்டித்துள்ளது. இப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்க தகுதி, இட ஒதுக்கீடு
உள்ளிட்ட தகவல் குறிப்பேட்டை www.pondiuni.edu.in/admissions-2022-23
என்ற இணைய முகவரியில் டவுன்லோடு செய்து கொள்ளலாம்.
வரும்
25ம் தேதி முதல்
31ம் தேதி வரை
விண்ணப்பத்தில் தவறுகளை
திருத்தம் செய்து கொள்ள
கால அவகாசம் வழங்கப்பட
உள்ளது.
மேலும்,
விபரங்களுக்கு https://nta.ac.in அல்லது https://cuet.samarth.ac.in என்ற
இணைய முகவரியை பார்க்கவும்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


