குடிமைப் பணிகளுக்கான பிரதானத் தேர்வை எழுத முடியாதோருக்கு வாய்ப்பு?
கொரோனா
தொற்று ஏற்பட்டதால், IAS.,
உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கான பிரதானத் தேர்வை எழுத
முடியாதவர்களுக்கு, மறு
வாய்ப்பு அளிக்கக் கோரி
வழக்கு தொடரப்பட்டுள்ளது.
IAS.,
உள்ளிட்ட பணிகளுக்கான தேர்வுகளை,
UPSC., எனப்படும் மத்திய
பணியாளர் தேர்வாணையம் நடத்துகிறது. இந்தாண்டு ஜன., 7 – 16ல்,
பிரதானத் தேர்வுகள் நடந்தன.
அந்த
நேரத்தில், கொரோனா தொற்று
ஏற்பட்டதால், இந்தத் தேர்வை
எழுத முடியாத மூன்று
பேர், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.அதில்
இருவர், சில தேர்வுகளை
எழுதவில்லை. அதே நேரத்தில்,
ஒருவர் அனைத்து தேர்வுகளையும் எழுதவில்லை.இதையடுத்து, எழுத
முடியாத தேர்வுகளை தங்களுக்கென தனியாக நடத்த உத்தரவிட
அவர்கள் கோரியுள்ளனர்.
அல்லது,
தங்களுக்கு மறுவாய்ப்பு அளிக்க
அவர்கள் கோரியுள்ளனர்.இந்த
வழக்கு, நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், சி.டி.ரவிகுமார்
அமர்வில், நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, UPSC., சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறியதாவது:
இது
மிகவும் சிக்கலான விஷயம்.
வரும் ஏப்.,ல்
பிரதானத் தேர்வுகளின் முடிவுகள்
வெளியிடப்பட்டு, நேர்முகத்
தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இவர்களுக்கென தனியாக தேர்வு நடத்த
முடியுமா என்பது குறித்து
ஆலோசித்து அறிவிக்கப்படும். இவ்வாறு
அவர் கூறினார்.
இதையடுத்து, வழக்கின் விசாரணையை, மார்ச்
21ம் தேதிக்கு அமர்வு
ஒத்தி வைத்துள்ளது.