TAMIL MIXER EDUCATION-ன் ஓய்வூதியதாரர்களுக்கான செய்திகள்
ஓய்வூதியா்களுக்கு வாழ்நாள்
சான்றிதழ் சமா்ப்பிக்க வாய்ப்புகள் அளிப்பு
– கிருஷ்ணகிரி
ஓய்வூதியா்கள் தங்கள் விருப்பத்தின்படி, வாழ்நாள்
சான்றிதழை அளிக்கலாம் என
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா்
வி.ஜெயசந்திரபானு ரெட்டி
அறிவுறுத்தினார்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சென்னை
ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம்,
மாவட்ட அரசு கருவூலம்
மற்றும் சார் கருவூலங்கள் மூலம் ஓய்வூதியம் பெரும்
தமிழக அரசு ஓய்வூதியா்கள், குடும்ப ஓய்வூதியா்கள் ஆண்டுதோறும் ஜூலை முதல் செப்டம்பா் மாதம் வரை கருவூலத்தில் ஆண்டு நேர்காணல் செய்யப்பட
வேண்டும்.
கரோனா
தொற்று காரணமாக கடந்த
2020 மற்றும் 2021-ஆம் ஆண்டிற்கான நேர்காணல் நடைபெறாத நிலையில்,
தற்போது அரசாணை நிலை
எண் 136 (ஓய்வூதியம்), துறை
நாள் 20.6.2022ன்
படி ஓய்வூதியா்கள் தங்களது
விருப்பத்திற்கேற்ப ஏதேனும்
ஒருமுறையைப் பின்பற்றி நிகழாண்டிற்கான (2022-2023) நேர்காணலில் பங்கேற்க
கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
அதன்படி,
தமிழ்நாடு அரசு ஓய்வூதியா்களின் நலனைக் கருத்தில் கொண்டு,
அவா்கள் நேரில் கருவூலத்துக்கு வருவதில ஏற்படும் இடா்பாடுகளைத் தவிர்க்கும் பொருட்டு, ஜீவன்
பிரமான் இணையதளம் மூலமாக
ஓய்வூதியா்கள், இந்திய
அஞ்சல் துறை வங்கியின்
சேவையைப் பயன்படுத்தி தங்களது
இருப்பிடத்திலிருந்தபடியே தபால்
துறை பணியாளா்கள் மூலம்
ரூ. 70 கட்டணம் செலுத்தி,
மின்னணு வாழ்நாள் சான்றிதழ்
பதிவு செய்து ஆண்டு
நேர்காணல் செய்யலாம்.
அரசு
இ–சேவை மற்றும்
பொதுச் சேவை மையங்கள்
மூலம் ஓய்வூதியா், குடும்ப
ஓய்வூதியா்கள் உரிய
கட்டணம் செலுத்தி மின்னணு
வாழ்நாள் சான்றிதழ் பதிவு
செய்து ஆண்டு நேர்காணல்
செய்யலாம்.
ஓய்வூதியா்கள் சங்கத்தின் மூலமாகவும், கைரேகை
குறியீட்டு கருவி (பயோ
மெட்ரிக் டிவைஸ்) மூலமும்
மின்னணு வாழ்நாள் சான்றிதழ்
பதிவு செய்து, ஆண்டு
நேர்காணல் செய்யலாம்.
மின்னணு
வாழ்நாள் சான்றிதழ் பெற
ஓய்வூதியா்கள், ஆதார்
எண், பிபிஓ எண்,
வங்கி கணக்கு எண்,
ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம்
ஆகிய விவரங்களை அளிக்க
வேண்டும். வாழ்நாள் சான்றிதழை
(https://www.karuvoolam.tn.gov.in/web/tnta/oamlogin) என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து,
வங்கியின் கிளை மேலாளா்
அல்லது உரிய அதிகாரிகளிடம் சான்றொப்பம் பெற்று தபால்
மூலம் அனுப்ப வேண்டும்.
ஓய்வூதியதாரா்கள் நேர்காணலுக்கு ஓய்வூதிய புத்தகத்துடன் ஒரு
அரசு வேலை நாள்களில்
காலை 10 முதல் பிற்பகல்
2 மணி வரை ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம் மற்றும்
கருவூலத்துக்குச் சென்று
ஆண்டு நேர்காணல் செய்யலாம்.
குறைபாடுகள் இருப்பின் தொடா்புடைய மாவட்ட
கருவூல அலுவலா், மண்டல
இணை இயக்குநா் அல்லது
சென்னை கருவூல கணக்குத்
துறை ஆணையரகத்துக்கு தொலைபேசி,
மின்னஞ்சல் வாயிலாக தெரிவிக்கலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


