Home Blog டிப்ளமோ மாணவர்களுக்கு அரியர் தேர்வுக் கட்டணம் செலுத்த மீண்டும் வாய்ப்பு

டிப்ளமோ மாணவர்களுக்கு அரியர் தேர்வுக் கட்டணம் செலுத்த மீண்டும் வாய்ப்பு

0

Buy Exam Books Here

Click Here

To Join Whatsapp

Click Here

To Follow FaceBook

Click Here

To Join Telegram Channel

Click Here

To Follow Twitter

Click Here

To Follow Instagram

Click Here

டிப்ளமோ மாணவர்களுக்கு அரியர் தேர்வு கட்டணம் செலுத்த அவகாசம் தரலாம் என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை கருத்து தெரிவித்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த மாணவர் தேவதுரை, இவர் ராமநாதபுரத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் டிப்ளமோ பட்டயப்படிப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் கொரோனா தொற்று காலத்தின் போது இவருக்காக அறிவிக்கப்பட்ட தேர்வு, எழுதுவதற்கான தேர்வு கட்டணத்தை முறையாக செலுத்த முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும் கட்டணத்தை செலுத்தியும் கால அவகாசம் முடிந்ததை அடுத்து தேர்வுக் கட்டணம் ஏற்றுக்கொள்ளப்பட வில்லை. மேலும், இதுதொடர்பாக தன்னை தேர்வுக்கட்டணம் செலுத்த அனுமதித்து முறையாக தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், நீதிபதி வைத்தியநாதன் அமர்வு, ஓர் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதில் குறிப்பாக கல்லூரி பருவங்களில் முழுமையான தேர்ச்சியை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதில் சில மாணவர்கள், தங்களை தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பு மாணவர்கள் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இதையடுத்து, இவற்றை கருத்தில் கொண்டு, மாணவர்களின் நலன் கருதி அரியர் தேர்வு கட்டணம் செலுத்த மேலும் ஒருமுறை அவகாசம் தரலாம் என்று தெரிவித்தனர். அவகாசம் வழங்குவது, தேர்வின்றி தேர்ச்சி என்ற அறிவிப்பை காட்டிலும் சிறப்பாக இருக்கும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். மறு மதிப்பீடு முடிவு வருவதற்குள் தேர்வு கட்டண அவகாசம் முடிந்துவிட்டதாக மாணவர் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.

Buy Exam Books Here

Click Here

To Join Whatsapp

Click Here

To Follow FaceBook

Click Here

To Join Telegram Channel

Click Here

To Follow Twitter

Click Here

To Follow Instagram

Click Here

Check Related Post:


NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

100
Xerox (1 page - 50p Only)
WhatsApp Group
Exit mobile version