HomeBlogவங்கி தேர்வுக்கான கட்டணத்துடன் கூடிய ஆன்லைன் பயிற்சி வகுப்புகள்

வங்கி தேர்வுக்கான கட்டணத்துடன் கூடிய ஆன்லைன் பயிற்சி வகுப்புகள்

வங்கி தேர்வுக்கான கட்டணத்துடன் கூடிய
ஆன்லைன் பயிற்சி வகுப்புகள்

பாரத
ஸ்டேட் வங்கி அதிகாரி
தேர்வு, IBPS., நடத்தும்
வங்கி அதிகாரி மற்றும்
கிளார்க் தேர்வுக்கான பயிற்சி
வகுப்புகள் திருச்செந்தூர் சிவந்தி
அகாடமி சார்பில் வருகிற
30-
ந்தேதி தொடங்குகிறது. பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்று 20 முதல்
30
வயதுள்ளவர்கள் IBPS.,
தேர்வையும், 21 முதல் 30 வயதுள்ளவர்கள் பாரத ஸ்டேட் வங்கி
தேர்வையும் எழுதலாம். பாரத
ஸ்டேட் வங்கி அதிகாரிகளுக்கான 2056 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வருகிற 25ம் தேதி கடைசி நாள்
ஆகும்.

எழுத்து
தேர்வில் சிறப்பாக வெற்றி
பெற உதவும் வகையில்
இந்த வழிகாட்டும் பயிற்சி
வகுப்புகள், திருச்செந்தூர் சிவந்தி
அகாடமி சார்பில் வருகிற
30-
ந் தேதி (சனிக்கிழமை) தொடங்கி, டிசம்பர் மாதம்
24-
ந்தேதி வரை மொத்தம்
40
நாட்கள் ஆன்லைன் மூலம்
நடத்தப்படும். பயிற்சிகள் தினமும் காலை 10 மணி
முதல் மதியம் 1 மணி
வரை நடைபெறும். பயிற்சியின்போது 20 மாதிரி தேர்வுகளும் ஆன்லைன்
மூலம் நடத்தப்படும்.

இந்த
பயிற்சியில் சேருபவர்களுக்கு வங்கி
தேர்வுகளில் இடம் பெறும்
பொது பகுத்தறியும் திறன்,
புதிர் வினாக்கள், எண்கணித
திறன், அளவுத்திறன், ஆங்கில
மொழித்திறன், நிலையான
ெபாது அறிவு, தகவல்
தரவு விளக்கங்கள் ஆகிய
தலைப்புகளில் 7 புத்தகங்கள் இலவசமாக வழங்கப்படும். இந்த
புத்தகங்கள் சிவந்தி அகாடமியின் சார்பில், பயிற்சி பெறுபவர்களின் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.

வங்கி
தேர்வுகளுக்கான பயிற்சி
வகுப்புகள் அனுபவமிக்க வல்லுனர்களால் ஆன்லைன் மூலம் நடத்தப்படும். இந்த பயிற்சி வகுப்பில்
சேர பயிற்சி கட்டணம்
ரூ.5,500 ஆகும். பயிற்சியில் சேர விண்ணப்பிக்க வருகிற
28
ம்
தேதி கடைசி நாள்
ஆகும்.

பயிற்சி
வகுப்பில் சேர விரும்புகிறவர்கள் ஒரு வெள்ளை
தாளில் தங்களது புகைப்படம் ஒட்டி, பெயர் பின்கோடுடன் முகவரி, தொலைபேசி எண்,
மெயில், வாட்ஸ்அப்
எண் போன்ற விவரங்கள்
குறிப்பிட்டு எழுதி,
அத்துடன் ரூ.5,500-க்கான
வங்கி வரைவோலையை (கனரா
வங்கி/ இந்தியன் ஓவர்சீஸ்
வங்கி/ பாரத ஸ்டேட்
வங்கி/ இந்தியன் வங்கி)
சிவந்தி
அகாடமி, திருச்செந்தூர் என்ற
பெயரில் எடுத்து அனுப்ப
வேண்டும்.

முகவரி:

சிவந்தி
அகாடமி தூத்துக்குடி ரோடு,

திருச்செந்தூர்-628 216,

தூத்துக்குடி மாவட்டம்.

பயிற்சிக்கான கட்டணம் எக்காரணம் கொண்டும்
திருப்பி தரப்பட மாட்டாது.
மேலும் விவரங்களுக்கு 04639 242998,
86829 85148, 94882 28404
ஆகிய தொலைபேசி எண்களில்
தொடர்பு கொள்ளலாம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular