ஆன்லைனில் கையெழுத்து பயிற்சி – செப்.6
பள்ளி மாணவ – மாணவிகள் ஆன்லைனில் பங்கேற்று பயன்பெறும் வகையில், ‘இந்து தமிழ்திசை’ நாளிதழ், ஏபிஜே அகாடமி உடன் இணைந்து நடத்தும் ‘கையெழுத்து பயிற்சி’ ஆன்லைன் நிகழ்ச்சி செப்.6 முதல் 8 நாட்கள் நடைபெற உள்ளது.
கரோனா பரவல் காரணமாக அனைத்து மாணவர்களுக்கும் பள்ளிகள் இன்னும் திறக்கப்படாத நிலையில், மாணவர்களுக்குப் பயனளிக்கும் வகையில், ‘இந்துதமிழ் திசை’ நாளிதழ் பல்வேறு செயல்பாடுகளை ஆன்லைனில் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, ‘கையெழுத்து பயிற்சி’ எனும் ஆன்லைன் நிகழ்ச்சியை 8 நாட்கள் நடத்துகிறது. செப்.6-ம் தேதிதொடங்கி, 14-ம் தேதி வரை (ஞாயிறு தவிர) தினமும் மாலை 6.30 முதல் 7.30 மணி வரை நடை பெறவுள்ளது.
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
இந்த கையெழுத்து பயிற்சியைகடந்த 7 ஆண்டுகளாக மாணவர்களின் திறன் மேம்பாட்டுக்காக பல பயிற்சிகளை வழங்கிவரும் ஏபிஜே அகாடமியின் நிறுவனரும், புகழ்பெற்ற கையெழுத்து பயிற்சியாளருமான தேவகி பாலாஜி வழங்க உள்ளார். இந்தப் பயிற்சியில் 7 வயது குழந்தைகள் முதல் அனைவரும் பங்கேற்கலாம்.
இதில் சேர்த்தெழுதுதல், கையெழுத்தில் நேர்த்தியும் தெளிவும், எழுத்துக்களை எழுதும் முறைஆகியவை குறித்து பயிற்சியளிக்கப்படும். இந்தப் பயிற்சிக்கான உள்ளடக்கம் தொடர்பானவை அனைவருக்கும் வழங்கப்படும். பெற்றோர் பிரின்ட் அவுட் எடுத்துக்கொள்ள வேண்டும். இதில் பங்கேற்கும் அனைவருக்கும் பயிற்சியின் முடிவில் அழகான கையெழுத்து அமையும்.
பங்கேற்க: Click
Here https://connect.hindutamil.in/event/116-handwriting-course.html
என்ற இணையதளத்தில் ரூ.750 பதிவுக் கட்டணம் செலுத்தி, பதிவு செய்ய வேண்டும்.
கூடுதல் விவரங்களுக்கு 9003966866 என்ற செல்பேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம்.


