இந்து தமிழ்
திசை, ஏபிஜே அகாடமி
சார்பில்
ஆன்லைனில் கையெழுத்துப் பயிற்சி
கரோனா
பரவல் காரணமாக வீடுகளிலேயே இருக்கும் பள்ளி மாணவ,
மாணவிகள் இணைய வழியில்
பங்கேற்று பயன்பெறும் வகையில்,
‘இந்து தமிழ் திசை’
நாளிதழ், ஏபிஜே அகாடமி
உடன்இணைந்து நடத்தும் ‘கையெழுத்துப் பயிற்சி’ ஆன்லைன் நிகழ்ச்சி
செப்டம்பர் 1-ம் தேதி
தொடங்கி, 8 நாட்கள் நடைபெற
உள்ளது.
பள்ளிகள்
இன்னும் திறக்கப்படாத நிலையில்,
மாணவர்கள் அனைவருக்கும் பயனளிக்கும் விதமாக, ‘இந்து தமிழ்
திசை’நாளிதழ் பல்வேறு
செயல்பாடுகளை இணைய
வழியாக தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது. அதன் ஒரு
பகுதியாக, ‘கையெழுத்துப் பயிற்சி’
எனும் ஆன்லைன் நிகழ்ச்சியை 8 நாட்கள் நடத்துகிறது. வரும்
செப்டம்பர் 1-ம் தேதி
தொடங்கி, 9-ம் தேதி
வரை(5-ம் தேதி
ஞாயிறு நீங்கலாக) தினமும்
மாலை 6.30 மணி முதல்
7.30 மணி வரை இப்பயிற்சி நடத்தப்படும்.
கடந்த
7 ஆண்டுகளாக மாணவர்களின் திறன்
மேம்பாட்டுக்காக பல
பயிற்சிகளை வழங்கிவரும் ஏபிஜே
அகாடமியின் நிறுவனரும், புகழ்பெற்ற கையெழுத்துப் பயிற்சியாளருமான தேவகி பாலாஜி இந்த
கையெழுத்துப் பயிற்சியை
வழங்க உள்ளார். இவர்
10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட
மாணவர்களுக்கு பயிற்சி
அளித்துள்ளார். இப்பயிற்சியில் 7 வயது குழந்தைகள் முதல்
அனைவரும் பங்கேற்கலாம்.
இதில்
சேர்த்து எழுதுதல், நேர்த்தியாகவும், தெளிவாகவும் எழுத்துகளை எழுதும்
முறை ஆகியவை குறித்து
பயிற்சி அளிக்கப்படும். இப்பயிற்சிக்கான உள்ளடக்கங்கள் அனைவருக்கும் வழங்கப்படும். இதை
பிரின்ட்–அவுட்எடுத்துக்கொள்ள வேண்டும்.
இதில்
பங்கேற்கும் அனைவருக்கும் நாள்தோறும் பயிற்சிகள் வழங்கப்பட்டு, பயிற்சி
முடிவில் அனைவருக்கும் அழகான
கையெழுத்து அமையும்.
பங்கேற்க
விரும்புவோர் https://connect.hindutamil.in/event/116-handwriting-course.html
என்ற இணையதளத்தில் ரூ.750
பதிவுக் கட்டணம் செலுத்தி,
பதிவு செய்து பங்கேற்கலாம்.
கூடுதல்
விவரங்களுக்கு 9003966866 என்ற செல்பேசி எண்ணில்
தொடர்பு
கொள்ளலாம்.