UPSC, TNPSC தேர்வுகளுக்கு ஆன்லைனில் வழிகாட்டு நிகழ்ச்சி
UPSC, TNPSC
தேர்வுகளுக்கு ஆன்லைனில்
வழிகாட்டு நிகழ்ச்சி
‘இந்து
தமிழ் திசை’ நாளிதழ்,
‘சங்கர் ஐஏஎஸ் அகாடமி’யுடன்
இணைந்து வழங்கும் ‘ஆளப்
பிறந்தோம்’ எனும் வழிகாட்டு
நிகழ்ச்சி வரும் ஞாயிறு
காலை 10.30 மணிக்கு இணையவழியில் நடைபெறுகிறது.
UPSC,
TNPSC தேர்வுகளில் வெற்றி
பெற வேண்டும் என்ற
ஆசை பலருக்கும் உண்டு.ஆனால்,
அதற்கான அடிப்படை கல்வித்
தகுதி, எத்தனை ஆண்டுகள்
படிக்க வேண்டும், அதற்கான
செலவு என ஏராளமான
கேள்விகளுடன் தயங்கி
நிற்பவர்களே அதிகம்.
அவ்வாறான
தயக்கத்தைப் போக்கி, தெளிவைத்
தரும் நோக்கில் ‘ஆளப்
பிறந்தோம்’ என்றநிகழ்ச்சி இணையவழியில், வரும் ஞாயிற்றுக்கிழமை காலை
10.30 முதல் மதியம் 1 மணி
வரை நடைபெறுகிறது. இந்த
நிகழ்ச்சியில், ஒடிசா
மாநிலம் கஞ்சாம் மாவட்ட
பெர்ஹாம்பூர் சப்–கலெக்டர்
வி.கீர்த்திவாசன், ஐஏஎஸ்,
தேனி மாவட்டம் உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் செல்வி
ப.கவுசல்யா, சங்கர்
ஐஏஎஸ் அகாடமி இயக்குநர்
டாக்டர் எஸ்.டி.வைஷ்ணவி
ஆகியோர் கருத்துரையாற்ற உள்ளனர்.
இந்நிகழ்ச்சியில் பள்ளி, கல்லூரி
மாணவ, மாணவிகளும், யுபிஎஸ்சி,
டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்குத் தயாராகும் அனைவரும் கலந்துகொண்டு பயன்பெறலாம்.
இதில்
பங்கேற்க விரும்புவோர் https://www.htamil.org/00224 என்ற
லிங்க்கில் பதிவுசெய்து கொள்ள
வேண்டும்.
Unknown
January 27, 2022Good morning ng Sir I am registered in this programme link not get in link sir