HomeBlogஒரே ரெயில், ஒரே தொலைபேசி உதவி எண் - 139

ஒரே ரெயில், ஒரே தொலைபேசி உதவி எண் – 139

 

ஒரே ரெயில்,
ஒரே தொலைபேசி உதவி
எண் – 139

ரயில்
பயணத்தின் போது பயணம்
செய்பவர்களுக்கு ஏற்படும்
குறைகளையும், ரயில்வே நேரம்
குறித்த விசாரணை போன்றவற்றிற்கும் தனி தனியாக
பல தொலைபேசி எண்கள்
இருந்தது. இதனால் பயணம்
செய்பவர்கள் பல எண்களை
நினைவில் வைத்துக்கொள்ள முடியாத
நிலை உள்ளது. இதனை
தடுக்கும் விதத்தில் ரயில்வே
துறை “139”
என்ற ஒற்றை எண்ணை
அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த
எண் மூலமாக பயணம்
செய்பவர்களுக்கு தேவையான
அனைத்து குறைகளும் தீர்க்கப்படுகிறது.

மேலும்
பயணம் செய்யும் போது
இந்த எண்ணை நினைவில்
வைத்துக்கொள்வது எளிதாக
உள்ளது. இந்த எண்ணை
ஸ்மார்ட்போன் மட்டுமல்லாமல் சாதாரண தொலைபேசியில் கூட
பயன்படுத்தலாம். 139 எண்ணில்
தொலைபேசி சேவை 12 மொழிகளில்
கிடைக்கும். இதில் ரெயில்
பயணிகள், .வி.ஆர்.எஸ்.
எனப்படும் பதிவு செய்யப்பட்ட குரல்வழி சேவையை பயன்படுத்தலாம். மேலும் நட்சத்திரக்குறியை (ஆஸ்டெரிஸ்க் *) அழுத்துவதன் மூலம், ரெயில்வே
கால் சென்டர் அலுவலரை
நேரடியாக தொடர்புகொண்டு தகவல்
பெறலாம்.

ஒரே
ரெயில், ஒரே தொலைபேசி உதவி
139
எண் பயன்படுத்தும் முறை:

139 தொலைபேசி
மூலம் பயன்படுத்துபவர்கள் எந்த
எண்ணை அழுத்தினால் என்ன
சேவை கிடைக்கும் என்பது
குறித்த அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.

எண்
1:
இந்த எண்ணை அழுத்தினால் பாதுகாப்பு மற்றும் மருத்துவ
உதவிக்கு ரயில்வே கால்
சென்டர் அலுவலரை நேரடியாக
அணுகலாம்.

எண்
2:
இந்த எண்ணை அழுத்தினால் விசாரணைகள், பி.என்.ஆர்.
நிலை, ரெயில் வருகை,
புறப்பாடு, கட்டணம், டிக்கெட்
முன்பதிவு, ரத்து, விழிப்பு
அலாரம், உணவு, சக்கர
நாற்காலி முன்பதிவு போன்றவை
கிடைக்கும்.

எண்
3:
இந்த எண் மூலமாக
பொதுவான புகார்கள் தெரிவிக்கலாம்.

எண்
4:
இந்த எண் மூலமாக
லஞ்சம் தொடர்பான புகார்கள்
தெரிவிக்கலாம்.

எண்
5:
இந்த எண் மூலமாக
பார்சல் மற்றும் சரக்கு
தொடர்பான விசாரணைகளை தெரிவிக்கலாம்.

எண்
6:
இந்த எண் மூலமாக
.ஆர்.சி.டி.சி.யால்
இயக்கப்படும் ரெயில்கள்
தொடர்பான விசாரணைகளை தெரிவித்து கொள்ளலாம்.

எண்
7:
இந்த எண் மூலமாக
ஏற்கனவே அளித்த புகார்
பற்றிய நிலையை அறியலாம்.

எண்
8:
இறுதியாக நட்சத்திரக்குறி(*) மூலமாக
கால் சென்டர் அலுவலருடன் நேரடியாக பேசலாம். மேலும்
இந்த எண் குறித்த
விழிப்புணர்வை மக்களிடம்
ஏற்படுத்த ஒரே
ரெயில், ஒரே தொலைபேசி உதவி எண் 139 என்ற சமூக ஊடக
பிரசாரத்தையும் ரெயில்வே
அமைச்சகம் தொடங்கியுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular