
தூத்துக்குடி மாவட்டத்தில் மீன்வளக் கல்லூரியில் “விரால் மீன்களின் இனப்பெருக்கம் மற்றும் குஞ்சு உற்பத்திக்கான தொழில்நுட்பம்” குறித்த ஒரு நாள் வளாக வழியிலான பயிற்சி வருகிற நவம்பர் 13ம் தேதி நடைபெற உள்ளது.
தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப்பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமான தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் “விரால் மீன்களின் இனப்பெருக்கம் மற்றும் குஞ்சு உற்பத்திக்கான தொழில்நுட்பம்” பற்றிய ஒரு நாள் வளாக வழியிலான பயிற்சி 13.11.2024 அன்று காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை வழங்கபட உள்ளது.
இப்பயிற்சியில் விரால் மீனின் உயிரியல், சினைமீன் தேர்வு செய்தல், ஹார்மோன் செலுத்தும் முறைகள், இனப்பெருக்கம், குஞ்சு சேகரித்தல், குஞ்சுகளை வளர்க்கும் தொழில்நுட்பம், உணவு மற்றும் உணவிடுதல் மேலாண்மை மற்றும் பொருளாதாரம் ஆகிய தலைப்புகளில் தொழில்நுட்ப வகுப்பு பயிற்சி அளிக்கப்படும்.
இப்பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பமுள்ள அனைவரும் ரூ.300 செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும். பயிற்சியாளர்கள் நேரடியாகவோ அல்லது கல்லூரி வங்கி கணக்கு வாயிலாகவோ பணத்தை செலுத்தலாம். பயிற்சியின் முடிவில் பயிற்சியாளர்களின் சான்றிதழ் மற்றும் பயிற்சி கையேடு வழங்கப்படும்.
இப்பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள தொழில் முனைவோர் மற்றும் இதர நபர்கள் அனைவரும் நவம்பர் 12ம் தேதி மாலை 5 மணிக்குள் “உதவி பேராசிரியர், மீன் வளர்ப்பு துறை, மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தூத்துக்குடி – 628 008” என்ற முகவரியில் அல்லது தொலைபேசி 8072208079 மூலமாக தொடர்பு கொண்டு கண்டிப்பாக பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
எங்கள் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் குழுக்களில் சேரவும்
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

