படித்து வேலைவாய்ப்பற்ற இளைஞர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் மற்றும் இளைஞர் திறன் திருவிழாவானது புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெறவுள்ளது.
தமிழ்நாடு மாநில ஊரக, நகர்புற வாழ்வாதார இயக்கம், மகளிர் திட்டம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் மாவட்ட தொழில்நெறி வழிகாட்டு மையம் இணைந்து நடத்தும் இந்நிகழ்வானது கந்தர்வக்கோட்டை புதுப்பட்டி ஊராட்சியில் அரசு ஊராட்சியில் பாலிடெக்னிக் கல்லூரியில் 19.10.2023 (வியாழக்கிழமை) அன்று காலை 10 மணி முதல் மதியம் 4 மணி வரை நடைபெறவுள்ளது.
இலவச தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் மற்றும் இளைஞர் திறன் திருவிழாவில் 18 வயது முதல் 45 வயதிற்குட்பட்ட 5ம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு, ஐ.டி.ஐ.. டிப்ளமோ போன்ற அனைத்து படிப்பும் படித்த ஆண்கள் மற்றும் பெண்களுக்கு முன்னணி தனியார்துறை நிறுவனங்களிலிருந்து வேலைவாய்ப்பிற்காக தேர்வு செய்து பணி நியமன ஆணையானது வழங்கப்பட உள்ளது.
மேலும், இளைஞர் திறன் திருவிழாவில் இலவச திறன் பயிற்சிக்கு இளைஞர்களை தோவு செய்வதற்கு தீன்தயாள் உபாத்யாய கிராமின் கௌசல் யோஜனா திட்டத்தின் கீழ் 15 பயிற்சி நிறுவனங்களும் பிற திறன் மேம்பாட்டு பயிற்சி நிறுவனங்களும் கலந்து கொண்டு பல்வேறு திறன் பயிற்சிக்காக இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு மூன்று மாதம் முதல் ஆறு மாதம் வரையிலான தேர்வாணை வழங்கப்பட உள்ளது.
மேலும் , இலவச திறன் பயிற்சிக்கு பிறகு தனியார் துறை நிறுவனங்களில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படவுள்ளது. இலவச வேலைவாய்ப்பு முகாம் மற்றும் இளைஞர் திறன் திருவிழாவில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் கலந்து கொண்டு பயனடையலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


