நுண்ணீர் பாசனம் – துளி நீரில் அதிக பயிர் என்ற நோக்கில்
Tamil Nadu Government
விவசாயிகளுக்காக ஒரு முக்கியமான மானியத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
இந்த திட்டத்தின் மூலம்,
சொட்டுநீர் பாசனம் (Drip Irrigation) மற்றும்
தெளிப்பு நீர் பாசனம் (Sprinkler Irrigation) ஆகிய முறைகள் மூலம்
நீர்சேமிப்பு, அதிக விளைச்சல் மற்றும் செலவு குறைப்பு கிடைக்கிறது.
🌱 திட்டத்தின் முக்கிய அம்சங்கள்
📌 2021 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை
👉 ரூ. 3,869.34 கோடி நிதியில்
👉 4,80,550 ஹெக்டர் பரப்பளவில்
👉 4,89,590 விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.
💰 மானிய விவரம்
🔹 சிறு / குறு விவசாயிகள்
✅ 100% மானியம்
👉 அதிகபட்சமாக ஒரு பயனாளிக்கு 2 ஹெக்டர் பரப்பளவிற்கு
🔹 இதர விவசாயிகள்
✅ 75% மானியம்
👉 அதிகபட்சமாக ஒரு பயனாளிக்கு 5 ஹெக்டர் பரப்பளவிற்கு
📌 மேலும், ஏரிக் மற்றும் சேவைவரி (GST) நீக்கி மானியம் வழங்கப்படுகிறது.
🚜 நுண்ணீர் பாசனத்தின் பயன்கள்
✔️ நீர் வீணாவதை தடுக்கிறது
✔️ குறைந்த நீரில் அதிக மகசூல்
✔️ உரச் செலவு குறைவு
✔️ பயிர்களின் வளர்ச்சி சீராக இருக்கும்
✔️ விவசாய வருமானம் அதிகரிக்கும்
📝 விண்ணப்பிக்கும் முறை
👉 QR Code-ஐ Scan செய்து
விண்ணப்பத்தை பதிவு செய்யலாம். (Check Below Image for QR Code)
📍 விவசாயிகள் அருகிலுள்ள
வேளாண்மை / தோட்டக்கலைத் துறை அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
🌾 விவசாயிகளுக்கான முக்கிய அறிவிப்பு
இந்த நுண்ணீர் பாசனம் (Micro Irrigation) திட்டம்
நீர்சேமிப்பு மற்றும் நிலையான விவசாயத்திற்கு
மிகவும் பயனுள்ளதாக இருப்பதால்,
தகுதியுள்ள அனைத்து விவசாயிகளும்
இந்த வாய்ப்பை தவற விட வேண்டாம்.

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

