HomeBlogஇயற்கைக்கு கேடு நிகழாத பேப்பர் பென்சில் தயாரிப்பு தொழில்

இயற்கைக்கு கேடு நிகழாத பேப்பர் பென்சில் தயாரிப்பு தொழில்

 

இயற்கைக்கு கேடு நிகழாத
பேப்பர் பென்சில் தயாரிப்பு
தொழில்

பென்சில்
கொண்டு பேப்பரில் எழுதலாம்.
பேப்பரைக் கொண்டு பென்சில்
உருவாக்க முடியுமா? முடியும்.

இந்த
முறை மூலம் பென்சில்கள் செய்வதற்காக ஆயிரக்கணக்கான மரங்களும்
இயற்கை வளங்களும் அழிக்கப்படுவதைத் தடுக்கிறது.

இதனால்
இயற்கைக்கு எந்த ஒரு
கேடும் நிகழாது. அதேபோல்
குப்பையில் சேரும் காகிதத்தை
கொண்டு பேப்பர் பென்சில்
செய்து அதையும் ஒரு
சிறந்த சிறுதொழிலாக செய்யலாம்

பேப்பர்
பென்சில் தயாரிக்கும் முறை:

பேப்பர்
பென்சில் செய்வதற்கு இன்றைக்கு
மெஷின்கள் கூட வந்துவிட்டன. கைகளாலும் பேப்பர் பென்சிலை
உருவாக்க முடியும்.

பென்சிலின் நடுப்பகுதியில் உள்ள
எழுதுபொருளான கிராபைட்
குச்சிகள் மீது பழைய
காகிதத்தைக் கெட்டியாகச் சுருட்ட
வேண்டும். (இந்த கிராபைட்
(
கார்பன்) எளிதில் உடையும்
தன்மை கொண்டதால் கவனமாகக்
கையாள வேண்டும்) நான்கைந்து சுற்றுகளில் பேப்பரின் துணையுடன்
நேர்த்தியாகிவிடும்.

அதன்பின்னர் சுருட்டப்படும் பேப்பரில்
நேர்த்தியாக பசையை ஒட்டி
பென்சிலைத் தயாரித்துவிடலாம். இதனை
ரேசர் கொண்டு சீவி
உபயோகப்படுத்தலாம்.

இந்த
பேப்பர் பென்சில் ஒன்றை
உற்பத்தி செய்வதற்கு ஆகும்
செலவு சுமார் 2 ரூபாய்
75
பைசா. பிராண்டட் பென்சில்கள் விலை 5 ரூபாய்.

தரத்தைப்
பொறுத்தளவில் ரெண்டுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை.
ஆனா பிராண்டட் பென்சில்ல
பயன்படுத்துற மரங்களால்
நாட்டின் இயற்கை வளத்துக்குத்தான் கேடு.

இவ்வாறு
தயார் செய்த பேப்பர்
பென்சில்களை முதலில் ஒரு
சில பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று நேரடியாக விற்பனை
செய்யலாம். அதேபோல் உங்கள்
ஊரில் உள்ள பெட்டிக்கடை, மல்லிகை கடை, பேன்சி
ஸ்டோரில் விற்பனை செய்யலாம்
நல்ல இலாபம் கிடைக்கும்.

சுய தொழில் துவங்க வாழ்த்துக்கள். பதிவை அனைவருக்கும் ஷேர் செய்தால் யாரோ ஒருவருக்கு உதவும் என்பதை நம்புகிறோம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular