நீட் தேர்வு
தேதியில் மாற்றம் இல்லை
தேசிய
தேர்வு
முகமை அறிவித்த தேதியின்படி செப்டம்பர் 12ம் தேதி
நீட் தேர்வு நடக்க
இருக்கிறது. இதுவரை அந்த
தேதியில் மாற்றம் ஏதும் செய்யவில்லை. மருத்துவ படிப்புகளில் இந்த
ஆண்டு மாணவர்களை சேர்ப்பதற்கான தேசிய அளவிலான நுழைவுத்
தேர்வு (நீட்) இந்த
ஆண்டு நடக்குமா, நடக்காதா
என்ற எதிர்பார்ப்பு இருந்த
நிலையில் இந்த ஆண்டுக்கான நீட்
தேர்வு நடந்தே தீரும்
என்று தேசிய தேர்வு
முகமை அறிவித்தது. மேலும்,
தேர்வு எழுத வரும்
மாணவ மாணவியருக்கான வழிகாட்டு
நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன.
அதில்
ஓஎம்ஆர் விடைத்தாள் மாதிரியும், அதை எப்படி பூர்த்தி
செய்வது என்பதும் தெளிவு
படுத்தி தேசிய தேர்வு
முகமையின் இணைய தளத்தில்
வெளியிட்டுள்ளது. அதன்படி
தேர்வு எழுதுவோர் எந்தவித
தவறுகளும் செய்யாமல் விடைத்தாளை பூர்த்தி செய்ய வேண்டும்
அப்படி செய்தால் தான்
கணினியில் அது சரியான
முறையில் ஏற்கும் என்றும்
தெரிவித்துள்ளது. இந்நிலையில், தேர்வுக்கான ஹால்டிக்கெட்டுகள் தேர்வுக்கு 2 நாட்களுக்கு முன்னதாக வினியோகம்
செய்யப்படும் என்று
அறிவித்ததன் பேரில் செப்டம்பர் 9ம் தேதி ஹால்டிக்கெட்டுகளை இணைய தளத்தில்
இருந்து பதிவிறக்கம் செய்து
கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


