Join Whatsapp Group

Join Telegram Group

NLC வேலைவாய்ப்பு எழுத்துத்தேர்வு தேதி மாற்றம்

By admin

Updated on:

NLC வேலைவாய்ப்பு எழுத்துத்தேர்வு தேதி மாற்றம்

தமிழகத்தில் CORONA பரவலின் 2ஆம்
அலை மிகப்பெரும் தாக்கத்தை
ஏற்படுத்தி வருகிறது. இதன்
காரணமாக ஒவ்வொரு நாளும்
3
லட்சத்துக்கும் மேற்பட்ட
மக்கள் பாதிக்கப்படுகின்றனர். தவிர
தினசரி 4 ஆயிரம் வரை
இறப்பு எண்ணிக்கை பதிவு
செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தமிழகம்
உட்பட பல மாநிலங்களில் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்
அலுவலகங்கள், கல்வி நிறுவங்னகள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இதனால் பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு உட்பட
பல மாநில, மத்திய
அரசு தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில்
நெய்வேலி NLC மருத்துவமனையில், செவிலியர்
மற்றும் மருத்துவ உதவியாளருக்கான தற்காலிக பணியிடங்களை நிரப்புவதற்கு நடத்தப்படும் எழுத்துத்தேர்வு தேதி மாற்றப்பட்டு உள்ளது.

முன்னதாக
NLC
மருத்துவமனையில் செவிலியர்
மற்றும் மருத்துவ உதவியாளர்
பணிக்கான தற்காலிக பணி
இடங்களை நிரப்ப எழுத்துத்தேர்வு நடைபெறும் என கடந்த
12
ஆம் தேதி நாளிதழில்
செய்திகள் வெளியானது. அதில்
எழுத்துத் தேர்வு நடைபெறும்
நாள்கள் 26.05.2021 மற்றும்
27.05.2021
என குறிப்பிடப்பட்டிருந்தது. தற்போது
தமிழகத்தில் அதிகரித்து வரும்
கொரோனா தொற்று காரணமாக
அம்மருத்துவமனையில் கூடுதல்
தேவைகள் ஏற்பட்டுள்ளதாகவும், அதனால்
குறிப்பிடப்பட்டிருந்த தேதிகளில்
எழுத்துத் தேர்வுகள் 20.05.2021 மற்றும்
21.05.2021
ஆகிய தேதிகளில் நடைபெறும்
என அறிவிக்கப்பட்டு உள்ளது.

Related Post

Leave a Comment

× Xerox Shop [1 page - 50p Only]