HomeBlogகொரோனா வைரஸ் தாக்கத்தின் புதிய அறிகுறிகள் – கர்நாடகா மாநில சுகாதாரத்துறை

கொரோனா வைரஸ் தாக்கத்தின் புதிய அறிகுறிகள் – கர்நாடகா மாநில சுகாதாரத்துறை

 

கொரோனா வைரஸ்
தாக்கத்தின் புதிய அறிகுறிகள்கர்நாடகா மாநில சுகாதாரத்துறை

நாடு
முழுவதும் CORONA இரண்டாம்
அலை தாக்கம் வேகமாக
பரவி வருகிறது. கடந்த
24
மணி நேரத்தில் கொரோனாவால் 1,31,000க்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே
மத்திய, மாநில அரசுகள்
இணைந்து கொரோனாவை தடுக்க
பல நடவடிக்கைகள் எடுத்து
வருகின்றனர். பல மாநிலங்களில் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் கர்நாடகா மாநில சுகாதாரத்துறையினர் CORONA குறித்த
சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர். அதன்படி
தற்போது கொரோனா இரண்டாம்
அலை தாக்கத்தில் பரவி
வரும் கொரோனா வழக்கத்தை
விட சற்று மாறுதலாக
உள்ளதாகவும், கண் எரிச்சல்,
சிவந்த கண்கள், வாயுத்தொல்லை, அடிவயிற்றில் வலி,
படபடப்பு, காதடைப்பு, போன்ற
புதிய அறிகுறிகளுடன் நோயாளிகள்
மருத்துவமனைகளில் சேர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும்
கொரோனா இரண்டாம் அலையில்
பல நோயாளிகள் வாய்வு
பிரச்சனைகளை சந்திப்பதாகவும் தெரிவித்துள்ளனர். கொரோனா முதல்
அலையின் போது இது
2
சதவிகிதம் பேருக்கு மட்டுமே
காணப்பட்டது. மேலும் இந்த
உருமாறிய கொரோனா மிகவும்
வீரியமாகவும், எளிதாக
நுரையீரல்களை பாதிக்க
கூடியதாகவும், சுவாச
கோளாறுகள் ஏற்படுத்தப்பட உள்ளதாகவும் உள்ளது. இந்த அறிகுறிகள் அனைத்தும் முதல் பாதிப்பின் போது இருந்தது. ஆனால்
இந்த முறை அதிகமாக
உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular