HomeBlogதமிழக கோவில்களில் புதிய கட்டுப்பாடுகள் அமல் – CORONA எதிரொலி

தமிழக கோவில்களில் புதிய கட்டுப்பாடுகள் அமல் – CORONA எதிரொலி

 

தமிழக கோவில்களில் புதிய கட்டுப்பாடுகள் அமல்
CORONA எதிரொலி

தமிழகத்தில் மீண்டுமாக CORONA பரவல்
அதிகரித்து வருவதால் அரசு
பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த அறிவிப்பின் படி
வழிபாட்டு தலங்களில் இரவு
8
மணிக்கு மேல் பக்தர்கள்
அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி
அரசு அறிவித்த நடைமுறைகளுக்கு மக்கள் கண்டிப்பாக ஒத்துழைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அறநிலையத்துறை அதிகாரிகள் அரசு அறிவிப்பின் படி கோவில்களில் சில
கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.

அதன்படி
கோவில்களில் தரிசனம் செய்ய
வரும் பக்தர்கள் தேங்காய்,
பழம், பூ ஆகியவற்றை
தவிர்க்க வேண்டும். 60 வயதுக்கு
மேற்பட்டவர்கள், 10 வயதுக்கு
குறைந்தவர்கள் கோவில்களுக்கு வர அனுமதி இல்லை.
கோவில்களில் மதக்கூட்டங்கள், திருவிழாக்கள் நடத்துவதற்கு அனுமதி
மறுக்கப்பட்டுள்ளது. ஆனால்
சாமிக்கு நடக்கும் அபிஷேகம்,
சிறப்பு அலங்கார பூஜைகள்
அனைத்தும் வழக்கம் போல்
நடைபெறும்.

அரசு
கட்டுப்பாடு காரணமாக கடந்த
ஆண்டு கோவில்களில் சித்திரை
திருவிழாக்கள் ரத்து
செய்யப்பட்டது. அதே
போல இந்த ஆண்டும்
சித்திரை திருவிழா நடத்துவது
கேள்விக்குறியாகியுள்ளது. பெரும்பாலான கோவில்களில் அரசு அறிவித்த
கட்டுப்பாடுகள் இன்னும்
நடைமுறையில் இருந்து வருகிறது.
ஏப்ரல் 10 ஆம் தேதி
(
நாளை) முதல் சென்னை,
தமிழகம் உட்பட அனைத்து
வழிபாட்டு தலங்களிலும் கட்டுப்பாடுகள் அமலுக்கு வரும் என
தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular