தமிழக ரேஷன்
கடைகளில் இனி புதிய
நடைமுறை – அரசு அதிரடி
தமிழகம்
முழுவதும் உள்ள ரேஷன்
கடைகளில் இந்த மாதம்
முதல் அதிரடியாக பல
மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கைரேகை
வைக்கும் இயந்திரத்தின் மூலம்
பலருக்கும் கொரோனா நோய்
தொற்று பரவக் கூடும்
என்பதால், பயோமெட்ரிக் முறை
நிறுத்தப்பட்டது. தற்போது
மாநிலம் முழுவதும் கொரோனா
பாதிப்பு குறைந்து விட்டதால்
மீண்டும் கைரேகை முறை
இந்த மாதம் முதல்
அமல்படுத்தப்பட்டுள்ளதாக தமிழக
அரசு அறிவித்துள்ளது. இந்த
மாதம் முதல் தமிழகம்
முழுவதுமாக மீண்டும் பயோமெட்ரிக் முறையிலேயே பொருள்கள் வழங்கப்பட
உள்ளது.
அதனால்
சில நடைமுறைகளை கடைபிடிக்க ரேஷன் கடை ஊழியர்களுக்கு உணவு வழங்கல் துறை
அறிவுறுத்தியுள்ளது. அதன்படி
ஆதார் கார்டு புதுப்பிக்கப்படாமல் சிறுவயதில் பிடித்த
ஆதார் கார்டு கைரேகை
இருக்கும் பட்சத்தில், ரேஷன்
கடையில் கைரேகை விழாது.
ரேஷன்
கடைகளில் ஊழியர்கள் பயோமெட்ரிக் முறைகாக உங்களது கைரேகையை
பெறும்போது, கைரேகை சரியாக
விழாவிட்டால் பொருட்கள்
வழங்கப்படமாட்டாது. 18 வயதுக்கு
மேற்பட்ட குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே ரேஷன் கடையில்
பொருட்கள் வாங்கிச் செல்ல
முடியும்.
ஒரு
குடும்ப அட்டைதாரர்களுக்கு கைரேகை
தவறாகக் காட்டும் பட்சத்தில் பத்து நிமிடங்கள் கழித்துதான் மீண்டும் அந்த அட்டைக்கு
ஊழியரால் பில் போட
முடியும். வீணாக விற்பனையாளரிடம் வாக்குவாதம் செய்வதைத் தவிர்க்கவும். சமூக இடைவெளி மற்றும்
முக கவசம் அணியாமல்
வரும் குடும்ப அட்டைதாரர்களுக்கு கண்டிப்பாக பொருள்கள்
வழங்கப்படமாட்டாது என்று
அறிவுறுத்தப்பட்டுள்ளது. குடும்ப
அட்டைதாரர்கள் பொருள்கள்
வழங்கப்படும் தேதி
அறிவிப்பு பலகையில் இருக்கும்.
அதற்கு
தகுந்தார்போல் சிரமமின்றி உங்கள் பொருட்களை பெற்றுக்
கொள்ளலாம். அனைவருக்கும் அனைத்து
பொருட்களும் கண்டிப்பாக அந்த
மாத இறுதிக்குள் கிடைக்கும் வகையில் வழி செய்ய
வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது. கைரேகை பதிவாகாத
அட்டைதாரர்கள் சேவை
மையத்தில் ஆதார் புதிய
கைரேகை பதிவு செய்யவும்.
மேற்கூறிய அனைத்து வழிமுறைகளையும் ஆகஸ்ட் மாதம் முதல்
கடைபிடிக்க வேண்டும் என்று
அறிவுறுத்தப்பட்டுள்ளது.