ஏடிஎம் கார்டு
வைத்திருப்பவர்களுக்கு புது
தடை
ஏடிஎம்
கார்டு வைத்திருப்போருக்கு முக்கிய
எச்சரிக்கை அறிவிப்பு ஒன்று
வெளியாகியுள்ளது. நீங்கள்
டெபிட் கார்டு பயன்படுத்தி அடிக்கடி ஷாப்பிங் செய்பவராக
இருந்தால், இனி ஒவ்வொரு
முறையும் முழு விவரங்களையும் பதிவு செய்ய வேண்டும்.
ஏனென்றால்
வாடிக்கையாளர்களின் டெபிட்
கார்டு மற்றும் கிரெடிட்
கார்டு விவரங்களை வணிக
நிறுவனங்கள் சேமித்து வைக்க
ரிசர்வ் வங்கி தடை
விதித்துள்ளது. இந்த
தடை ஜனவரி 1ம்
தேதி முதல் அமலுக்கு
வருகிறது.
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
வழக்கமாக
ஷாப்பிங் செய்பவர்கள் டெபிட்
கார்டு பயன்படுத்தி கட்டணம்
செலுத்தும் போது அவர்களின்
கார்டு விவரங்கள் அனைத்தும்
ஏற்கனவே சேமிக்கப்பட்டிருக்கும். ஏனென்றால்
மூன்று இலக்க CVV எண்
மட்டும் வைத்து கட்டணத்தை
செலுத்தி விடலாம். ஆனால்
வாடிக்கையாளர்களின் கார்டு
விவரங்களை சேமித்து வைப்பதற்கு ரிசர்வ் வங்கி தடை
விதித்துள்ளது. இந்தத்
தடை ஜனவரி 1-ஆம்
தேதி முதல் அமலுக்கு
வருகிறது.
அதன்படி
ஏற்கனவே சேமித்து வைக்கப்பட்டிருக்கும் கார்டு எண்
உள்ளிட்ட விவரங்களும் அழிக்கப்பட்டுவிடும். எனவே இனி
நீங்கள் ஷாப்பிங் செய்யும்போது கட்டணம் செலுத்த ஒவ்வொரு
முறையும் 18 இலக்க கார்டு
எண் முழுமையாக பதிவு
செய்ய வேண்டும்.
அதனால்
அனைவரும் தங்கள் டெபிட்
கார்டு மற்றும் கிரெடிட்
கார்டு எண்களை மனப்பாடம்
செய்து வைக்க வேண்டும்.
இந்த புதிய நடைமுறை
ஜனவரி 1ம் தேதி
முதல் அமலுக்கு வருகிறது.
ஆன்லைன் மோசடிகளை தடுக்கும்
விதத்தில் கார்டு விவரங்களை
சேமித்து வைக்க ரிசர்வ்
வங்கி தடை விதித்துள்ளது.