HomeBlogNET தகுதி தேர்வு தேதிகளை அறிவித்தது UGC

NET தகுதி தேர்வு தேதிகளை அறிவித்தது UGC

NET Qualification Exam Dates Announced by UGC

NET தகுதி தேர்வு
தேதிகளை அறிவித்தது UGC

தேசிய தகுதித்
தேர்வான NET கடந்த 10 மாதங்களில் 4 முறை கொரோனா
பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டு இருந்தது.

UGC NET டிசம்பர்
2020
மற்றும் ஜூன் 2021 தற்போது
ஒரே தேர்வாக நடைபெற
உள்ளது. இருப்பினும், தேர்வு
நடைபெறும் தேதி உறுதியாக
வெளியிடப்படவில்லை.

கொரோனா
முதல் அலை முடிந்த
பின்னர் மற்ற நுழைவுத்
தேர்வுகளுடன் UGC NET தேர்வு
தேதிகள் ஒத்து போவதால்
தேர்வை நடத்தும் அமைப்பான
NTA
தேர்வை மாற்றியமைத்தது. பல
ஒத்திவைப்புகளுக்குப் பிறகு,
தேர்வு அக்டோபர் 17 முதல்
25
வரை நடத்த திட்டமிடப்பட்டு அதுவும் தோல்வியடைந்தது.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

இதனால்
NET
தேர்வுக்காக காத்திருக்கும் பலரும்
கவலை அடைந்தனர். மேலும்
விண்ணப்பதாரர்கள் சமூக
ஊடகங்களில் தங்கள் கவலைகளை
தெரிவிக்க தொடங்கினர். தேர்வுத்
தேதிகளை விரைவில் வெளியிடுமாறு கல்வி அமைச்சரிடமும் கோரிக்கை
வைத்தனர். தேர்வுகளுக்கு 10-15 நாட்களுக்கு முன் அனுமதி அட்டைகளை
வெளியிடுமாறும் அவர்கள்
UGC
யிடம் கூறியுள்ளனர்.

தேர்வுகளுக்கு முன்பாக தங்களுக்கு 30 நாட்கள்
நோட்டீஸ் கொடுக்க வேண்டும்
என்றும், திடீரென நடத்த
வேண்டாம் என்றும் கூறியுள்ளனர். நெட் தேர்வு தேதிகளைக்
அறிவிக்க கோரி விண்ணப்பதாரர்கள் #ReleaseNETEXAMDATE என்ற
ஹேஷ்டேக்கை ட்விட்டரில் ட்ரெண்டாக்கினர்.

UGC NET தேர்வு
தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும் என்று NTA ஒரு அறிவிப்பில் கூறியிருந்தது. இந்நிலையில் தற்போது அதிகாரப்பூர்வமாக தேர்வு
தேதியினை அறிவித்துள்ளது. இந்த
தேர்வுகள் நவம்பர் மாதம்
20,21,22,24,25,26,29,30
வரையிலும், பின்னர் டிசம்பர்
மாதம் 01,03,04,05 ஆகிய
தேதிகளிலும் நடைபெறும் என்று
கூறப்பட்டுள்ளது.

மேலும்
கூடுதல் விவரங்களுக்கு https://www.nta.ac.in/ என்ற
இணையதளத்தின் மூலம்
தெரிந்து
கொள்ளலாம்.

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!