புதிய கல்விக் கொள்கையின் மாநில மொழிகளில் மொழிப்பெயர்ப்பில் தமிழ் புறக்கணிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில், தற்போது தமிழில் மொழிப்பெயர்க்கப்பட்டு மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்தியாவில் நடைமுறையில் உள்ள 1986ம் ஆண்டு வகுக்கப்பட்ட பழமையான தேசிய கல்விக்கொள்கைக்கு மாற்றாக புதிய தேசிய கல்வி கொள்கை அறிவிக்கப்பட்டது. இதற்கு மத்திய அமைச்சரவை கடந்த ஆண்டு ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து நடைமுறைக்கு வந்தது. இதற்கு பல மாநில அரசுகளும், கல்வியாளர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், புதிய தேசிய கல்வி கொள்கை, மாநில மொழிகளில் மொழிப்பெயர்த்து மத்திய அரசு பதிவேற்றம் செய்துள்ளது. அதில், அசாமி, பெங்காலி, குஜராத்தி, கன்னடம் உள்ளிட்ட 17 மொழிகளில் புதிய தேசிய கல்வி கொள்கை மொழிப்பெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது.
ஆனால், தமிழ் மொழி இடம்பெறவில்லை. இதனையடுத்து புதிய கல்விக் கொள்கை மொழிப்பெயர்ப்பில் தமிழ் புறக்கணிக்கப்பட்டதற்கு பல அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர். கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், தற்போது தமிழிலும் மொழிப்பெயர்க்கப்பட்டு மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதனை கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கலாம்.
💎 Join Our Premium Group – Download PDFs Directly 📚
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place


