HomeBlogNEET விண்ணப்பக் கட்டணம் உயா்வு: கேள்விகளின் எண்ணிக்கை, தேர்வு நேரமும் அதிகரிப்பு

NEET விண்ணப்பக் கட்டணம் உயா்வு: கேள்விகளின் எண்ணிக்கை, தேர்வு நேரமும் அதிகரிப்பு

NEET Application Fee Increase: Increase in the number of questions and exam time

NEET விண்ணப்பக் கட்டணம் உயா்வு: கேள்விகளின் எண்ணிக்கை, தேர்வு நேரமும்
அதிகரிப்பு

இளநிலை
மருத்துவப் படிப்பு சோக்கைக்கான தேசிய தகுதி மற்றும்
நுழைவுத் தேர்வுக்கான (NEET)
கட்டணத்தை தேசிய தேர்வுகள்
முகமை (என்டிஏ) ரூ.100
அளவுக்கு உயா்த்தியுள்ளது. அதன்படி,
பொதுப் பிரிவினருக்கான கட்டணம்
ரூ. 1,500-லிருந்து ரூ.
1,600-
ஆக உயா்த்தப்பட்டுள்ளது.

விண்ணப்ப
பரிசீலனைக் கட்டணம், சரக்கு
மற்றும் சேவை வரி
(
ஜிஎஸ்டி) ஆகியவை விண்ணப்பதாரா்கள் சார்பில் செலுத்தப்பட வேண்டும்என்று, இந்த
கட்டண உயா்வுக்கான காரணத்தை
என்டிஏ தனியாக தெரிவித்துள்ளது.

இதே
அடிப்படையில், முதுநிலை
நீட் தேர்வுக்கான கட்டணத்தை
கடந்த ஆண்டு என்டிஏ
உயா்த்தியது. அதற்கு பல்வேறு
அமைப்புகளும், அரசியல்
கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. கல்விச் சேவைக்கு ஜிஎஸ்டி
வரி விதிப்பிலிருந்து விலக்கு
அளிக்கப்பட வேண்டும் என்றும்
வலியுறுத்தப்பட்டது. இந்த
நிலையில், இளநிலை நீட்
தேர்வுக்கான கட்டணத்தையும் என்டிஏ
நிகழாண்டில் உயா்த்தியுள்ளது.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

அதன்படி,
பொதுப் பிரிவினருக்கான கட்டணம்
ரூ. 1,500லிருந்து ரூ.
1,600
ஆக உயா்ந்துள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினா்
(
.டபிள்யூ.எஸ்.),
ஓபிசி பிரினருக்கான கட்டணம்
ரூ. 1,400 என்ற அளவிலிருந்து ரூ. 1,500-ஆக உயா்த்தப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி,
மாற்றுத்திறனாளிகள் மற்றும்
மூன்றாம் பாலினத்தவா்களுக்கான கட்டணம்
ரூ. 800லிருந்து ரூ.
900-
ஆக உயா்த்தப்பட்டுள்ளது.

அதுபோல,
வெளிநாட்டிலிருந்து விண்ணப்பிப்பவா்களுக்கான தேர்வுக் கட்டணம்
ரூ. 7,500-லிருந்து ரூ.
8,500-
ஆக உயா்த்தப்பட்டுள்ளது.

கேள்விகளின் எண்ணிக்கை, தேர்வெழுதும் நேரம் அதிகரிப்பு:

நிகழாண்டு
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வில் 200 கேள்விகள்
கேட்கப்பட உள்ளன. கொள்குறி
தேர்வு முறை அடிப்படையிலான இந்த தேர்வில் கடந்த
ஆண்டு வரை 180 கேள்விகள்
கேட்கப்பட்டு வந்த
நிலையில், நிகழாண்டில் இயற்பியல்,
வேதியியல், தாவரவியல், விலங்கியல் பாடங்களில் தலா 50 கேள்விகள்
வீதம் 200 கேள்விகள் கேட்கப்பட
உள்ளன.

அதற்கேற்ப,
தேர்வெழுதுவதற்கான கால
அவகாசம் 3 மணி நேரத்திலிருந்து 3 மணி 20 நிமிடங்களாக உயா்த்தப்பட்டுள்ளது. பிற்பகல் 2 மணிக்கு
தொடங்கும் தேர்வு மாலை
5.20
மணிக்கு நிறைவடையும். அதாவது
தேர்வில் கேட்கப்பட உள்ள
200
கேள்விகளுக்கு 200 நிமிடங்கள் அவகாசம் என்ற அடிப்படையில் தேர்வு நேரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க மே 6 கடைசி:

நிகழாண்டுக்கான நீட் தேர்வு வரும்
ஜூலை 17-ஆம் தேதி
நடத்தப்பட உள்ளது. அதற்கான
விண்ணப்பப் பதிவு புதன்கிழமை தொடங்கியது. விண்ணப்பிக்க மே
6
கடைசி நாளாகும்.

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
Bharani
Bharanihttp://www.tamilmixereducation.com
👨‍💻 Bharanidaran – Founder of Tamil Mixer Education ✍️ About Me Vanakkam! 🙏 I’m Bharanidaran, the creator and writer behind Tamil Mixer Education. With over 5 years of experience in the field of competitive exams and job updates, I’ve been helping thousands of Tamil Nadu students prepare for TNPSC, TNUSRB, and other government exams through my blogs, notes, and print services. My goal is simple: 👉 To provide accurate, fast, and easy-to-understand content to every aspirant who dreams of securing a government job.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!