
11ல் தேசிய தொழிற்பழகுனர் சேர்க்கை முகாம்பயிற்சி முடித்தவர்கள் பங்கேற்க அழைப்புநாமக்கல், நவ. 7-‘வரும், 11ல், தேசிய தொழிற்பழகுனர் சேர்க்கை முகாம் நடக்கிறது.
அதில், பயிற்சியை முடித்தவர்கள் பங்கேற்று பயன்பெறலாம்’ என, நாமக்கல் கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:தேசிய தொழிற்பழகுனர் ஊக்குவிப்பு திட்டம் மூலம், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில், மாவட்ட அளவில், பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுனர் சேர்க்கை முகாம், நாமக்கல் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில், வரும், 11 காலை, 10:00 முதல், மாலை, 5:00 மணி வரை நடக்கிறது.
அரசு, தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களில், ஐ.டி.ஐ., பயின்று வெற்றிகரமாக பயிற்சியை நிறைவு செய்து, இதுநாள் வரை தொழிற்பழகுனர் பயிற்சி மேற்கொள்ளாத பயிற்சியாளர்கள், தங்களது கல்வி சான்றிதழ், ஜாதி சான்றிதழ், பாஸ்போர்ட் அளவு போட்டோ, இரண்டு, ஆதார் அட்டை, தேசிய, மாநில தொழிற்சான்றிதழ் ஆகியவற்றின் அசல் மற்றும் நகல்களுடன் தொழிற்பழகுனர் சேர்க்கை முகாமில் பங்கேற்று பயன்பெறலாம்.தொழிற்பழகுனர் திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட தொழிற் நிறுவனங்கள், தங்களது நிறுவனத்தில் காலியாக உள்ள தொழிற்பழகுனர்களின் வெட்புலத்தை நிறைவு செய்யும் வகையில், உரிய நிறுவன பதாகைகளுடன் இம்முகாமில் நேரடியாக பங்கேற்று தொழிற்பழகுனர்களை தேர்வு செய்து பயன்பெறலாம்.மேலும் விபரங்களுக்கு, ‘உதவி இயக்குனர், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், மூன்றாம் தளம், அறை எண், 304,- 306, கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம், நாமக்கல்–637003‘ நேரிலோ அல்லது 04286–290297, 7904111101, 9499055842 என்ற தொலைபேசி, மொபைல் எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
எங்கள் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் குழுக்களில் சேரவும்
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


I do not even know the way I finished up here,
however I thought this put up was once great. I do not
understand who you are but definitely you are going to a famous blogger when you are not already.
Cheers!