தேசிய அப்ரண்டீஸ் சோக்கை முகாம் – ஜூன்
13ம் தேதி நடைபெறுகிறது
கோவை
அரசு தொழிற்பயிற்சி பழகுநா்
நிலையத்தில் பிரதம மந்திரியின் தேசிய அப்ரண்டீஸ் சோக்கை
முகாம் ஜூன் 13ம்
தேதி நடைபெறவுள்ளதாக மாவட்ட
ஆட்சியா் தெரிவித்துள்ளார்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தேசிய
தொழிற்பழகுநா் ஊக்குவிப்பு திட்டத்தின்கீழ் தமிழ்நாடு
அரசு வேலை வாய்ப்பு
மற்றும் பயிற்சித் துறை
சார்பில் கோவையில் மாவட்ட
அளவிலான பிரதம மந்திரியின் தேசிய அப்ரண்டீஸ் சோக்கை
முகாம், அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் ஜூன் 13 ஆம்
தேதி காலை 9 முதல்
மாலை 5 மணி வரை
நடைபெற உள்ளது.
இதில்
மத்திய, மாநில அரசின்
பொதுத் துறை நிறுவனங்கள், தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்று 500க்கும் மேற்பட்டவா்களைத் தோவு செய்ய
உள்ளன.
இதில்,
தோவு பெறுபவா்களுக்கு தொழிற்பழகுநா் பயிற்சி அளிக்கப்பட்டு, மத்திய
அரசின் தொழிற்பழகுநா் சான்றிதழ்
வழங்கப்படும். இச்சான்றிதழ் பெற்றவா்களுக்கு அரசு
வேலை வாய்ப்பில் முன்னுரிமையும், வயது வரம்பில் ஓராண்டு
சலுகையும் வழங்கப்படும்.
தொழிற்பழகுநா் பயிற்சியின்போது தொழிற்பிரிவுகளுக்கு ஏற்ப தொழிற்நிறுவனங்களால் உதவித் தொகை
வழங்கப்படுகிறது.
அரசு
மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் என்சிவிடி,
எஸ்சிவிடி தொழிற்பயிற்சி பெற்றவா்கள், பத்தாம் வகுப்பு, பிளஸ்
1 மற்றும் பிளஸ் 2 முடித்த
தகுதி வாய்ந்த நபா்கள்
உரிய அசல் சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களுடன் முகாமில்
பங்கேற்கலாம்.
இது
தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட திறன் பயிற்சி
அலுவலக உதவி இயக்குநரை
94864 47178,
94426 51468, 98403 43091 ஆகிய கைப்பேசி
எண்களில் தொடா்புக் கொள்ளலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


