ஆக., 17 முதல் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில், இடைநிலை ஆசிரியர் தேர்வு பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது என, கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:கரூர், வெண்ணைமலையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
இதில், தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தில், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு போட்டி தேர்வு நடத்தப்படவுள்ளது. இந்த தேர்வுகளுக்கு பாடத்திட்டத்தில் தமிழ், ஆங்கிலம், குழந்தை வளர்ச்சி மற்றும் கற்பித்தல் ஆகிய பாடங்கள் ஒரே மாதிரியாக இருப்பதால், ஒருங்கிணைந்த பயிற்சி வகுப்புகள் நடத்தப்படவுள்ளது. இதற்கான வகுப்புகள் வரும், 17 முதல் தொடங்கப்படவுள்ளது.
தொலைதுாரத்தில் வசிக்கும் இளைஞர்கள் மற்றும் அலுவலகத்திற்கு நேரில் வர இயலாதவர்கள், அரசுப்பணி தேர்வுகளுக்கான பயிற்சி பெற்று பயனடையும் வகையில், கல்வி தொலைக்காட்சியின் மூலமாக பயிற்சி வகுப்புகள் ஒளிபரப்பப்படுகிறது.
மேலும் https://tamilnaducareerservices.tn.gov.in என்ற இணையத்திலும், TncareerServicesEmployment என்ற Youtube சேனலிலும் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள், கரூர் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நேரில் அல்லது தொலைபேசி எண்: 4324-223555, studycirclekarur@gmail.com என்ற இ.மெயில் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


