ஆடுகளின் உற்பத்தி திறனை அதிகப்படுத்துவதில் புதிய தொழில்நுட்பங்கள் குறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரியில், 3 நாள் இலவச பயிற்சி முகாம் நடக்கிறது.
நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் செல்வராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை:ஆடுகளின் உற்பத்தி திறனை அதிகப்படுத்தும் புதிய தொழில்நுட்பங்கள் குறித்து, 3 நாள் இலவச பயிற்சி, நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி, கால்நடை உற்பத்தி மேலாண்மை துறையில் வரும், 8ம் தேதி முதல், 10ம் தேதி வரை நடக்கிறது.
ஆடுகளின் உற்பத்தி திறனை அதிகப்படுத்துவதன் மூலம் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் புதிய தொழில்நுட்பங்கள் குறித்து எடுத்துக்கூறப்படும். பரண் மேல் ஆடு வளர்ப்பு, வறட்சி காலங்களில் தீவன மேலாண்மை முறை, ஆடுகளுக்கான மாற்றுத் தீவனப்பொருட்கள், ஆடு வளர்ப்பில் மேய்ச்சல் நிலத்தின் பங்கு, இறைச்சிக்கான கிடா குட்டிகள் வளர்ப்பு, குட்டிகளை இறப்பிலிருந்து காப்பாற்றி அதிக லாபம் பெறும் வழிமுறைகள், செயற்கை முறை கருவூட்டல், ஆடுகளைத் தாக்கும் நோய்கள், தடுப்பூசி அளித்தல் மற்றும் ஒட்டுண்ணிதாக்கமும் தடுக்கும் முறைகள் உள்ளிட்டவை குறித்து செய்முறை பயிற்சி அளிக்கப்படும்.
விவசாயிகள், பண்ணையாளர்கள், ஊரக மகளிர், தொழில் முனைவோர்கள், இளைஞர்கள் மற்றும் ஆர்வமுள்ள அனைவரும் கலந்து கொள்ளலாம்.
கலந்து கொள்பவர்களுக்கு இடுபொருட்கள், சான்றிதழ்கள் மற்றும் புத்தகங்கள் வழங்கப்படும். ஆர்வம் உள்ள விவசாயிகள், பண்ணையாளர்கள் முன்பதிவு செய்ய 0428 6-26 6388 என்ற தொலைபேசி எண் அல்லது 80125 15699 என்ற மொபைல் எண்ணில் தொடர்புகொள்ளலாம். நாமக்கல் மாவட்ட விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இவ்வாறு கூறியுள்ளார்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


