TAMIL MIXER EDUCATION-ன்
TNPSC செய்திகள்
TNPSC குரூப்-4
தேர்வு எழுதுவோருக்கு முன்மாதிரி தேர்வு
– நாமக்கல்
இதுகுறித்து நாமக்கல் ஆட்சியா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாமக்கல்
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்
தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில்
செயல்பட்டு வரும் தன்னார்வ
பயிலும் வட்டத்தின் வாயிலாக,
பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு இலவசமாக பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
அதன்படி,
ஜூலை 24ல் நடைபெற
உள்ள 7,301 பணிக் காலியிடங்கள் கொண்ட குரூப்-4 தேர்வுக்கான முன்மாதிரி தேர்வு நாமக்கல்
மாவட்ட அளவில் வரும்
10, 17ம் தேதிகளில் (ஞாயிற்றுக்கிழமை) நாமக்கல் தெற்கு அரசினா்
ஆண்கள் மேல்நிலைப் பள்ளி
மற்றும் கொல்லிமலை அரசினா்
தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெற உள்ளது.
இரண்டு
முன்மாதிரி தேர்வுகளும் மேம்படுத்தப்பட்ட பாடத் திட்டத்தின்படி அசல் வினாத்தாள் போல,
100 பொதுத்தமிழ் வினாக்கள், 100 பொது
அறிவியல் வினாக்களை (தமிழ்
மற்றும் ஆங்கிலம்) உள்ளடக்கியவை ஆகும். முன்மாதிரி தேர்வில்,
போட்டித் தேர்வுக்கு தயாராகும்
மாணவா்கள் பங்கேற்பதன் மூலம்
தேர்வு அறையில் ஏற்படும்
சந்தேகங்கள் தீா்க்கப்படுவதுடன், அதனை
எதிர்கொள்ளும் முறை,
தேர்வு பற்றிய அச்சம்
ஆகியவற்றை போக்கிக் கொள்ள
முடியும். எவ்வித பதற்றமின்றி தங்களது கனவான அரசுப்
பணியை எளிதில் அடையலாம்.
இம்மாதிரி
தேர்வில் பங்கேற்க விரும்பும் தேர்வா்கள் மாதிரி தேர்வு
நடைபெறும் அன்று காலை
9 மணிக்குள் ஆதார் அட்டை
நகல்
–
1, கடவுச்சீட்டு அளவிலான
புகைப்படம்
–
1 ஆகியவற்றுடன் தேர்வுக்கு விண்ணப்பித்த விண்ணப்ப
நகல் – 1 மற்றும் அனுமதி
அடையாள அட்டை நகல்
ஆகியவற்றுடன் கலந்துகொண்டு பயன்பெறலாம்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


