கால்நடை பராமரிப்புத் துறையில் வேலைவாய்ப்பு என
தவறான தகவல் – ஆட்சியர்
எச்சரிக்கை
திண்டுக்கல் மாவட்டத்தில் கால்நடை
பராமரிப்புத்துறையில் வேலைவாய்ப்பு என தவறான தகவல்
பகிரப்படுவதாகவும், இதனை
பொதுமக்கள் நம்ப வேண்டாம்
என்றும் மாவட்ட ஆட்சியர்
விசாகன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டு உள்ள
செய்திக்குறிப்பில், தமிழ்நாடு
கால்நடை பராமரிப்புத்துறையில் Animal Handler and
Animal Handler cum Driver ஆகிய பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு, சம்பளம்
முறையே ரூ.15,000/- மற்றும்
ரூ.18,000/- எனவும்
தகுதி மற்றும் வயது
ஆகியவை நிர்ணயிக்கப்பட்டு 90 மணிநேரம்
பயிற்சி அளித்து பணி
நியமன ஆணை வழங்கப்படும்.
இதற்கான
ஜுன் முதல் வாரத்தில்
அல்லது 2-வது வாரத்தில்
வெளியிடப்படும் எனவும்,
விருப்பமுள்ளவர்கள் பதிவு
செய்திடுமாறு, புலனம்
(whatsapp) செயலி மூலம் பகிரப்பட்டு வருகிறது. இது தவறானது.
இதன் மூலம் பகிரப்படும் செய்திகள், தமிழ்நாடு கால்நடை
பராமரிப்புத்துறைக்கு தொடர்பற்றவை. மேலும், இது தவறான
தகவல்கள். எனவே இத்தகவலை
பொதுமக்கள் யாரும் நம்ப
வேண்டாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


