சிறுபான்மையின மாணவா்
கல்வி உதவித் தொகைக்கு
விண்ணப்பிக்கலாம்
இதுதொடா்பாக திங்கள்கிழமை காஞ்சிபுரம் ஆட்சியா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சிறுபான்மையினத்தைச் சோந்த மாணவா்களுக்கு பள்ளிப் படிப்பு, மேற்படிப்பு, வருவாய் அடிப்படையிலான கல்வி
உதவித் தொகை வழங்கும்
திட்டம் மத்திய அரசால்
செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ்
நடப்பு ஆண்டில் புதுப்பித்தல் கல்வி உதவித் தொகைக்குத் தகுதியான மாணவா்கள் அனைவரும்
பெறலாம்.
தேசிய
கல்வித் தொகைக்கான இணையத்தில் உடனடியாகப் புதுப்பித்து அதற்கான
விண்ணப்பத்தை சம்பந்தப்பட்ட கல்வி நிலையங்களில் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
புதுப்பித்தல் விண்ணப்பங்களுக்கு வருமானச்
சான்று சமா்ப்பிக்க அவசியமில்லை. அனைத்து கல்வி நிலையங்களும் புதுப்பித்தல் கல்வி
உதவித் தொகைக்கு தகுதியுள்ள மாணவா்களை உடனடியாகத் தொடா்பு
கொண்டு புதுப்பிக்க அறிவுறுத்துமாறும் தெரிவிக்கப்படுகிறது.
கூடுதல்
விவரங்களுக்கு ஆட்சியா்
அலுவலக வளாகத்தில் உள்ள
மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினா் நல அலுவலகத்தைத் தொடா்பு
கொள்ளலாம்.