
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் இணைய வழி பால் காளான் வளர்ப்பு பயிற்சி
தமிழ்நாடு வேளாண் பல்கலை பயிர் நோயியல் துறை சார்பில், இணையவழி பால் காளான் வளர்ப்பு பயிற்சி, நவ., 2ம் தேதி நடைபெறவுள்ளது.
இப்பயிற்சி, காலை, 10:00 முதல் மதியம், 1:00 மணி வரை நடைபெறும். இதில், காளான் சாகுபடி முறைகள், காளான் வளர்ப்பு அறை அமைத்தல், பூச்சி மற்றும் நோய் மேலாண்மை, காளான் அறுவடை மற்றும் பதப்படுத்துதல், சந்தைப்படுத்துதல் உள்ளிட்ட பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
மாணவர்கள், விவசாயிகள், பெண்கள் உட்பட ஆர்வமுள்ளவர்கள் இதில் பங்கேற்கலாம். பயிற்சி கட்டணம், பயிற்சியில் பங்கேற்பதற்கான இணைப்பு விபரம், www.tnau.ac.in என்ற இணையதளத்தில் உள்ளது.விபரங்களுக்கு, 0422-6611336 / 96294 96555 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

