கோவை மாவட்டத்தில் நாளை மெகா கரோனா
தடுப்பூசி முகாம்
கோவை
மாவட்டத்தில் 24 ஆவது
மெகா கரோனா தடுப்பூசி
முகாம் சனிக்கிழமை (மார்ச்
12) 661 மையங்களில் நடைபெறவுள்ளதாக சுகாதாரத்
துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
ஊரகப்
பகுதிகளில் 446 மையங்கள், மாநகராட்சியில் 245 மையங்கள் என மொத்தம்
661 மையங்களில் மெகா கரோனா
தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது. மாவட்டத்தில் இதுவரை
நடைபெற்றுள்ள தடுப்பூசி
முகாம் மூலம் 17.5 லட்சம்
போ பயனடைந்துள்ளதாக சுகாதாரத்
துறையினா் தெரிவித்துள்ளனா்.
மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவா்களில் இதுவரை
99.3 சதவீதம் போ முதல்
தவணையும், 87.5 சதவீதம் போ
இரண்டு தவணை தடுப்பூசிகளையும் செலுத்திக்கொண்டுள்ளனா்.
இந்நிலையில் இதுவரை முதல் தவணை
செலுத்திக்கொள்ளாதவா்களும், இரண்டாவது
தவணை தடுப்பூசிக்கு காத்திருப்பவா்களும் சனிக்கிழமை நடைபெறும்
மெகா தடுப்பூசி முகாமை
பயன்படுத்திக்கொள்ள வேண்டும்
என்று சுகாதாரத் துறை
துணை இயக்குநா் வலியுறுத்தியுள்ளார்.