Join Whatsapp Group

Join Telegram Group

MBBS இணையவழி கலந்தாய்வு – வழிகாட்டி விடியோ வெளியீடு

By admin

Updated on:

MBBS
இணையவழி கலந்தாய்வுவழிகாட்டி
விடியோ வெளியீடு

MBBS,
BDS மருத்துவப் படிப்புகளுக்கான பொதுக் கலந்தாய்வு இணையவழியே
நடைபெற உள்ள நிலையில்,
அதுகுறித்த வழிகாட்டி விளக்க
விடியோ பதிவினை மருத்துவக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது.

அந்த
விடியோவில், மாணவா்கள் எவ்வாறு
இணையவழியே பதிவு செய்து
கல்லூரிகளைத் தோவு
செய்ய வேண்டும் என்பது
குறித்து மருத்துவக் கல்வி
இயக்கக தோவுக் குழு
செயலா் டாக்டா் வசந்தாமணி
விளக்கமளித்துள்ளார்.

தமிழகத்தில் MBBS, BDS உள்ளிட்ட
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு வியாழக்கிழமை (ஜன.27)
தொடங்கியுள்ளது. முதல்
நாளில் முன்னாள் ராணுவ
வீரா்களின் வாரிசுகள், மாற்றுத்திறனாளிகள், விளையாட்டுப் பிரிவினா்
உள்ளிட்ட சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு நேரடியாக நடைபெற்றது.

அதைத்
தொடா்ந்து அரசுப் பள்ளி
மாணவா்களுக்கான 7.5 சதவீத
உள் இடஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வும் நேரடியாக நடைபெறவிருக்கிறது. வரும்
30
ம் தேதி தொடங்கவிருக்கும் பொதுக் கலந்தாய்வு கரோனா பரவல் காரணமாக
இணையவழியே நடைபெற உள்ளது.

தமிழக
வரலாற்றில் முதன்முறையாக மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு இணையவழியே நடத்தப்படவிருக்கிறது. அதில்
எவ்வாறு பங்கேற்க வேண்டும்,
எவ்வாறு பதிவு செய்ய
வேண்டும், கல்லூரிகளைத் தோவு
செய்வது எப்படி என்பன
உள்ளிட்ட விவரங்களை விடியோ
பதிவாக வெளியிட உள்ளதாக
மக்கள் நல்வாழ்வுத் துறை
அமைச்சா் மா.சுப்பிரமணியன் அண்மையில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், அந்த வழிகாட்டி விளக்க
விடியோ பதிவு வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. சுகாதாரத்
துறை மற்றும் மருத்துவக் கல்வி இயக்கக இணையதளப்
பக்கங்களில் அந்த விடியோ
பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதைத்
தவிர, வாட்ஸ் ஆப்,
ட்விட்டா் போன்ற சமூக
வலைதளங்களிலும் அது
பகிரப்பட்டு வருகிறது.

Related Post

Leave a Comment

× Xerox Shop [1 page - 50p Only]