விளையாட்டுத் துறையில்
அணிவகுக்கும் படிப்புகள்
பள்ளியில்
படிக்கும் காலத்தில் பல
நிலைகளில் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று, சான்றிதழ்களையும் பதக்கங்
களையும் கோப்பைகளையும் குவிக்கும் மாணவர்கள் ஏராளம்.
அப்படி
விளையாட்டுத் துறையில்
ஜொலிக்கும் பலரும் சான்றிதழ்,
பதக்கங்களை வைத்து அரசு
வேலைகளுக்குச் செல்லவே
விரும்புவார்கள். ஆனால்,
விளையாட்டுத் துறையிலேயே நீடிக்கவும் எதிர்காலத்தில் பிரகாசிக்கவும் இத்துறையில் நிறைய பட்டப்
படிப்புகள் உள்ளன.
நன்றாக
விளையாடி ஜொலித்தால் மத்திய,
மாநில அரசுத் துறைகளில்
வேலைக்குச் செல்லலாம் என்றாலும்,
அரசுத் துறைக்கு அப்பாலும்
பல வேலைவாய்ப்புகள் குவிந்து
கிடக்கின்றன. நடுவர், பயிற்சியாளர், கிளப் மேனேஜர், விளையாட்டு இதழியல், ஸ்போர்ட்ஸ் அட்மினிஸ்டிரேஷன் என விளையாட்டுத் துறையில் மட்டுமல்ல, கல்வி
நிறுவனங்களிலும் பணி
வாய்ப்புகள் நிறைந்து கிடக்கின்றன.
உங்களுக்கு விளையாட்டில் ஆர்வமும்
மருத்துவரீதியில் உடற்
தகுதியும் இருந்தால் போதும்.
பி.பி.இ.டி
என்கிற பேச்சிலர் இன்
பிசிக்கல் எஜுகேஷன் பட்டப்
படிப்பைப் படிக்கலாம். இப்படிப்பில் சேர பட்டப் படிப்பை
முடித்திருந்தாலே போதும்.
இது இரண்டாண்டு படிக்கக்கூடிய படிப்பு. இப்படிப்புக்குப் பொறுமை
மிக மிக அவசியம்.
ஏனென்றால், விளையாடத் தெரியாதவர்களுக்கு பயிற்சி அளிக்க
வேண்டி வரும். அவர்களுக்குத் திறம்பட பயிற்சி அளிக்கக்கூடிய திறனும் மனப்பக்குவமும் இருக்க
வேண்டும். இப்படிப்பை முடித்தால், நடுவர், பயிற்சியாளர், கிளப்
மேனேஜர் போன்ற பணிகளுக்குச் செல்லலாம்.
தொடக்கத்திலேயே கணிசமான மாதச் சம்பளத்தில் சேரலாம். அனுபவம் மற்றும்
தனித் திறமை இருந்தால்,
அதன் மூலம் இன்னும்
அதிகம் சம்பாதிக்கலாம். இந்தப்
படிப்பு சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ.
காலேஜ் ஆஃப் பிசிக்கல்
எஜுகேஷன், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் உள்ளிட்ட
கல்வி நிறுவனங்களில் உள்ளது.
இதேபோல் பிளஸ் டூ
முடித்தவர்கள் ஒய்.எம்.சி.ஏ.வில்
பேச்சிலர் ஆஃப் பிசிக்கல்
எஜுகேஷன் அண்ட் சயின்ஸ்
என்கிற மூன்றாண்டு பட்டப்
படிப்பில் சேரலாம். இரண்டாண்டு படிக்கக்கூடிய டிப்ளமோ
இன் பிசிக்கல் எஜுகேஷன்
படிப்பும் உள்ளது.
இதேபோல
சென்னை உடற்கல்வியியல் மற்றும்
விளையாட்டுப் பல்கலைக்கழகத்திலும் பி.பி.இ.டி.
படிப்பில் சேரலாம். இந்தப்
படிப்பு மட்டுமல்லாமல் பிளஸ்
2 முடித்தவர்கள் பி.எஸ்சி.,
ஸ்போர்ட்ஸ் அண்ட் எக்சர்சைஸ் பிசியாலஜி என்கிற படிப்பில்
சேரலாம். அறிவியல் பட்டப்
படிப்பு படித்தவர்கள், எம்.எஸ்சி.,
ஸ்போர்ட்ஸ் பயோ மெக்கானிக்ஸ் என்னும் படிப்பிலும் சேரலாம்.
எம்.எஸ்சி., இன்
ஸ்போர்ட்ஸ் கோச்சிங் ஓராண்டு
பட்ட மேற்படிப்பும் உள்ளது.
அதையும் தாண்டி எம்.பி.ஏ.,
ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மென்ட் என்கிற
பட்ட மேற்படிப்பும் படிக்கலாம். இப்படி உடற்கல்வியில் பி.எச்டி.
வரை படிக்க நிறைய
படிப்புகள் உள்ளன.
பொறியியல்
மாணவர்கள் விளையாட்டுத் துறையில்
சாதிக்கவும்கூட எம்.டெக்.,
இன் ஸ்போர்ட்ஸ் டெக்னாலஜி
என்கிற படிப்பு உள்ளது.
இந்தியாவில் முதல் முறையாக
சென்னை விளையாட்டுப் பல்கலைக்கழகத்தில்தான் இப்படிப்பு அறிமுகம்
செய்யப்பட்டது. உடற்கல்வி
சம்பந்தமான படிப்பில் எஜுகேஷன்
அண்டு ஸ்போர்ட்ஸ் பிசியாலஜி,
மேனேஜ்மென்ட் ஆஃப்
பிசிக்கல் எஜுகேஷன் அண்டு
ஸ்போர்ட்ஸ் ஃபர்ஸ்ட் எய்ட்,
ஹெல்த் எஜுகேஷன் பிரின்சிபல் ஆஃப் கோச்சிங் உள்ளிட்ட
படிப்புகளும் கற்பிக்கப்படுகின்றன.
அண்மைக்
காலமாக மத்திய, மாநில
அரசுகள் விளையாட்டுத் துறைக்கு
அதிக முக்கியத்துவம் அளித்துவருகின்றன. ஆக, எதிர்காலத்தில் உடற்கல்வி சார்ந்த பட்டப்
படிப்புகளுக்கும் அதிக
முக்கியத்துவம் கிடைக்கக்கூடும். எனவே, விளையாட்டு துறையில்
சாதிக்க விரும்புகிறவர்கள் உடற்கல்வி
தொடர்பான படிப்புகளைத் தேர்ந்தெடுத்துப் படித்துத் தங்கள்
திறமையை வெளிப்படுத்தலாம்.