வேளாண்மை பொறியியல் துறை சார்பில் கிராமப்புற இளைஞர்களுக்கு மார்ச் 19 முதல் திறன் மேம்பாட்டுப் பயிற்சி
வேளாண்மை பொறியியல் துறை சாா்பில், கிராமப்புற இளைஞா்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி மாா்ச் 19-ஆம் தேதி தொடங்குகிறது.
இது தொடா்பாக திருநெல்வேலி இயந்திர கலப்பை பணிமனை உதவி செயற்பொறியாளா் பீ.கேத்தரின் தெரசா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வேளாண்மை பொறியியல் துறை சாா்பில் கிராமப்புற இளைஞா்களுக்காக வேளாண் கருவிகள் இயக்குதல், பராமரித்தல், பழுதுபாா்த்தல் தொடா்பான திறன் மேம்பாட்டு பயிற்சி மாா்ச் 19 முதல் 16 நாள்கள் தினந்தோறும் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறவுள்ளது.
இப்பயிற்சியில் பங்கேற்க விரும்புபவா்கள் 10, 12-ஆம் வகுப்பில் தோச்சி பெற்றவராகவோ, ஏதாவது ஒரு பிரிவில் பட்டம் பெற்றவராகவோ, டிப்ளோ அல்லது ஐடிஐ படித்தவராகவோ 18 முதல் 45 வயதுக்குள்பட்டவராகவோ இருக்க வேண்டும்.
இந்த பயிற்சிக்கு மாா்ச்18வரை விண்ணப்பிக்கலாம். பாஸ்போா்ட் அளவு புகைப்படம், வங்கி புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதாா் அட்டை, கல்வி தகுதிக்கான சான்று, ஜாதி சான்று ஆகியவற்றை விண்ணப்பத்துடன் இணைத்து உதவி செயற்பொறியாளா் (வே.பொ) அலுவலகம், இயந்திர கலப்பை பணிமனை, எண்.1, டிராக்டா் வீதி, என்ஜிஓ ஏ காலனி, திருநெல்வேலி 627007 என்ற முகவரிக்கு அனுப்பலாம்.
மேலும் விவரங்களுக்கு 0462-2900766, 6383131868, 7598478081 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் எனக் கூறியுள்ளாா்.
உங்களிடம் உள்ள PDF Files XEROX வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow