HomeBlogமனோன் மணியம் சுந்தரனார் பல்கலை ஆராய்ச்சி பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை – தகுதிமிக்க ஆராய்ச்சி மாணவர்கள்...

மனோன் மணியம் சுந்தரனார் பல்கலை ஆராய்ச்சி பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை – தகுதிமிக்க ஆராய்ச்சி மாணவர்கள் உதவித் தொகை பெற வாய்ப்பு

 

மனோன் மணியம்
சுந்தரனார் பல்கலை ஆராய்ச்சி
பட்டப்படிப்புகளுக்கான மாணவர்
சேர்க்கைதகுதிமிக்க ஆராய்ச்சி
மாணவர்கள் உதவித் தொகை
பெற வாய்ப்பு

திருநெல்வேலி மனோன் மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் எம்.பில்,
பிஎச்டி பட்டப்படிப்புகளுக்கான மாணவர்
சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் அனுப்ப மார்ச் 31 ஆம்
தேதி கடைசி நாள்
என பல்கலைக்கழக பதிவாளர்
தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள
மனோன் மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் உள்ள
பல்வேறு துறைகளில் எம்.பில்,
பிஎச்டி பட்டப்படிப்புகளுக்கான மாணவர்
சேர்க்கை தகுதி தேர்வு
அடிப்படையில் நடைபெறும்.
இந்நிலையில் அடுத்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடத்த
தகுதி தேர்வுக்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலமாக நடத்தபடுகின்றன.

இந்த
படிப்புகளுக்கு முதுகலை
பட்டப்படிப்பு முடித்த
மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த
படிப்புகள் தொடர்பான பாடப்பிரிவுகள், அடிப்படை தகுதிகள், கட்டண
விவரங்கள், தகுதி தேர்வு
தேதி மற்றும் அனுமதி
நெறிமுறைகள் போன்ற விவரங்கள்
www.msuniv.ac.in
என்ற
இணையதளம் மூலமாக தெரிந்து
கொள்ளலாம். இந்த படிப்புகளில் நெட், செட், ஜெஆர்எப்,
கேட் நுழைவு தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு விலக்கு
அளிக்கப்பட்டுள்ளது.

இந்த
மாணவர் சேர்க்கைக்கான தகுதி
தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 1 ஆண்டு வரை இந்த
தகுதி தேர்வு செல்லுபடி
ஆகும். ஆராய்ச்சி பிரிவு
பகுதி என பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் உள்ள
இணைய விண்ணப்பம் மூலமாக
இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

இந்த
தேர்வுகளுக்கு விண்ணப்ப
கட்டணம் ரூ.1000 வசூலிக்கப்படும். ஏப்ரல் மாதம் 8 மற்றும்
9
ஆம் தேதிகளில் நடைபெறுகிறது.மேலும் இந்த பல்கலைக்கழக துறைகளில் முழுநேர ஆராய்ச்சிக்காக தேர்வு செய்யப்படும் தகுதிமிக்க ஆராய்ச்சி மாணவர்கள் உதவித்
தொகை பெற வாய்ப்புள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular